Home /News /entertainment /

கயல் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்... இனி மராத்தியிலும் பார்க்கலாம்!

கயல் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்... இனி மராத்தியிலும் பார்க்கலாம்!

கயல் சைத்ரா ரெட்டி

கயல் சைத்ரா ரெட்டி

நர்சாக பணிபுரியும் கயல் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது தம்பி, தங்கைகளை கவனித்து கொள்ளும் ஒரு குடும்பத்தலைவராகவும், தைரியமான பெண்ணாகவும் இருக்கிறார்.

    சின்னத்திரை சீரியல்களில் டி.ஆர்.பி-யில் முன்னணி இடத்தில் இருக்கும் கயல் சீரியல் தற்போது மராத்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

    சின்னத்திரையில் காமெடி ஷோக்கள், விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக மக்களை ஆக்கிரமித்துள்ளது சீரியல்கள் தான். வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் சனி வரை தினமும் சீரியல்கள் ஒளிபரப்படுவதிலேயே, மக்கள் மத்தியில் சீரியல்களுக்கு உள்ள மவுசு பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

    சீரியல்கள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களிலும் போட்டி என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி-க்கு இடையில் தான். மக்கள் மனதை கவர்ந்த பல சேனல்கள் இருந்தாலும் இந்த இரு சேனல்கள் தான் பெரும்பாலான மக்களை கவர்ந்தவையாக உள்ளன. சன் டிவி-யில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    TRP ரேட்டிங்கை பொறுத்தவரை இந்த 2 சேனல்களின் சீரியல்கள் தான் எப்போதுமே டாப் 5 லிஸ்ட்டில் இடம்பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தான் நீண்ட நாட்களாக டி.ஆர்.பி-யில் முன்னணியில் இருந்து வருகிறது.

    Beast: எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!

    நர்சாக பணிபுரியும் கயல் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது தம்பி, தங்கைகளை கவனித்து கொள்ளும் ஒரு குடும்பத்தலைவராகவும், தைரியமான பெண்ணாகவும் இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக கதாநாயகன் செயல்படுகிறார். இதில் கயலாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil TV Express (@tamiltvexpress_)






    பிரபல நடிகையுடன் காதல்... நடிகர் வினய் விரைவில் திருமணம்!

    கயல் சீரியலில் சைத்ராவுக்கு ஜோடியாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் கார்த்திக் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவி-யின் ராஜா ராணி சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் தற்போது கயல் சீரியல் மராத்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ரீமேக் செய்யப்படும் கயலின் மராத்தி பதிப்பு சன் மராத்தி சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி