Home /News /entertainment /

டிஆர்பி-யில் முதலிடம் பிடித்த சன் டிவி சீரியல்... பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவி

டிஆர்பி-யில் முதலிடம் பிடித்த சன் டிவி சீரியல்... பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவி

கயல் சீரியல்

கயல் சீரியல்

சீரியல்கள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களிலும் போட்டி என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி-க்கு இடையில் தான்.

    பொழுதுபோக்கை மையமாக வைத்து கொண்டுள்ள பல டிவி சேனல்கள் தமிழகத்தில் உள்ளன. இந்த சேனல்கள் அனைத்திலுமே பல வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    காமெடி ஷோக்கள், விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக மக்களை ஆக்கிரமித்து உள்ள ஒன்று உள்ளதென்றால் அது சீரியல்கள் தான். வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் சனி வரை தினமும் சீரியல்கள் ஒளிபரப்படுவதிலேயே மக்கள் மத்தியில் சீரியல்களுக்கு உள்ள மவுசு பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

    சீரியல்கள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களிலும் போட்டி என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி-க்கு இடையில் தான். மக்கள் மனதை கவர்ந்த பல சேனல்கள் இருந்தாலும் இந்த இரு சேனல்கள் தான் பெரும்பாலான மக்களை கவர்ந்தவையாக உள்ளன. சன் டிவி-யில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி 2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா, உள்ளிட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

    தவிர அத்திப்பூக்கள், உதிரிபூக்கள், மெட்டிஒலி உள்ளிட்ட பழைய சீரியல்களும் சன் டிவி-யில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. விஜய் டிவி-யிலும் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே, செந்தூரப்பூவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    Yashika Anand: வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்ன யாஷிகா ஆனந்த் - விரைவில் டும் டும் டும்!

    TRP ரேட்டிங்கை பொறுத்தவரை இந்த 2 சேனல்களின் சீரியல்கள் தான் எப்போதுமே டாப் 5 லிஸ்ட்டில் இடம்பிடித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் அதிக TRP ரேட்டிங்கை பெற்ற சீரியல்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. டாப் 5 லிஸ்ட்டில் மொத்தம் 2 சன் டிவி சீரியல்களும், 3 விஜய் டிவி சீரியல்களும் உள்ளன.

    விஜயகாந்த் செயலால் கோபம் தலைக்கேறிய ரஜினி - நடந்தது என்ன?

    அதன்படி முதலிடத்தில் சன் டிவி சீரியலான கயல் இருக்கிறது. இரண்டாமிடத்தில் விஜய் டிவி-யின் பாக்கியலட்சுமி உள்ளது. மூன்றாம் இடத்தில் சன் டிவி-யின் சுந்தரி, நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் விஜய் டிவி-யின் பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sun TV, Vijay tv

    அடுத்த செய்தி