Home /News /entertainment /

அடேங்கப்பா ஒருநாளைக்கு இவ்வளவா? சன் டிவி கயல் சீரியல் நடிகர்களின் சம்பளம்!

அடேங்கப்பா ஒருநாளைக்கு இவ்வளவா? சன் டிவி கயல் சீரியல் நடிகர்களின் சம்பளம்!

கயல் சீரியல்

கயல் சீரியல்

சமீபத்திய TRP ரேட்டிங்கின்படி சன் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களிலேயே டாப்பில் இருப்பது கயல் சீரியல் தான்.

    நமது இல்லங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரபல தமிழ் சேனல்கள் அனைத்துமே ஏதாவதொரு வகையில் ரசிகர்களை கவர்ந்து உள்ளன. சில சேனல்கள் விறுவிறுப்பான ரியாலிட்டி ஷோக்களுக்காக, சில சேனல்கள் நல்ல காமெடி சீன்களை ஒளிபரப்புவதற்காக, சில மனதை மயக்கும் இனிமையான பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்புவதற்காக என பிரபலமாக உள்ளன.

    பாடல் மற்றும் காமெடிக்காக பிரத்யேகமாக உள்ள சேனல்களை தவிர தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான சீரியல்களுக்காக பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் சன் டிவி சீரியல்களுக்கென்று உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியல்களை ஒளிபரப்புவதில் நேரடி போட்டி என்றால் அது சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி ஆகிய 2 சேனல்களுக்கும் தான்.

    இந்த 2 சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி TRP ரேட்டிங் லிஸ்ட்டில் டாப் 5 இடங்களை பிடித்து வருகின்றன. பிற சேனல்களிலும் சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த 2 சேனல்களின் சீரியல்கள் பெறும் TRP ரேட்டிங்கை அவற்றால் நெருங்க முடியவில்லை. சன் டிவி-யை பொறுத்த வரை, காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி 2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா, உள்ளிட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

    இவை எல்லாம் தற்போதைய சீரியல்கள் என்றாலும் காலை நேரத்தில் அத்திப்பூக்கள், உதிரிபூக்கள், நந்தினி, மற்றும் மெட்டி ஒலி உள்ளிட்ட பழைய சீரியல்களும் சன் டிவி-யில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்திய TRP ரேட்டிங்கின்படி சன் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களிலேயே டாப்பில் இருப்பது கயல் சீரியல் தான். ஹீரோ எழிலரசனாக நடிகை ஆல்யா மானஸாவின் கணவர் சஞ்சீவ் கார்த்தி, ஹீரோயினாக யாரடி நீ மோகினி சீரியல் புகழ் நடிகை சைத்ரா ரெட்டி ஆகியோர் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

    நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...

    வானத்தைப் போல, சுந்தரி, ரோஜா, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களுக்கு மத்தியில் கயல் சீரியல் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதற்கு விறுவிறுப்பான கதைக்களமும், நடிகர்களின் திறமையான நடிப்பும் பக்கபலமாக இருக்கிறது. இதனிடையே கயல் சீரியலில் முக்கிய ரோல்களில் நடித்து வரும் நடிகர்கள் நாளொன்றுக்கு வாங்கும் சம்பளம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்

    இதன்படி ஒரு நாளைக்கு நடிகை சைத்ரா ரெட்டி ரூ.25 ஆயிரம், நடிகர் சஞ்சீவ் ரூ.20 ஆயிரம், தேவியின் காதலனாக வரும் நடிகர் கோபி ரூ.10 ஆயிரம், கயலின் தங்கை தேவியாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ரூ.8000, கயலின் பெரியப்பாவாக வில்லத்தனம் செய்யும் நடிகர் முத்துராமன் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி