சன் டி.வி.யின் ப்ரைம் டைம் சீரியலான “கண்ணான கண்ணே” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீரியல் தெலுங்கில் வெளியான 'பௌர்ணமி' மற்றும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது ஆகும்.
நிமிக்ஷிதா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் கெளதம் என்ற தந்தை கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் நடிக்க, அவரின் மகளாக புதுமுக நடிகை நிமிக்ஷிதா மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராகுல் ரவி என்பவர் 'யுவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த சீரியலில் சிறப்பு தோற்றமாக இனியா இருந்துவருகிறார்.
பிரசவத்தின் போது மனைவி உயிரிழந்துவிட்டதால், மகளை வெறுக்கும் தந்தையாக பிரித்திவிராஜும், அப்பாவின் பாசம் கிடைக்காதா? என ஏங்கும் மகளாக நிமிக்ஷிதாவும் நடித்து வருகின்றனர். அம்மா, தங்கை, பாட்டி என அனைவருக்கும் பிடித்த செல்ல பிள்ளையாக இருக்கும் மீரா. தந்தையின் பாசத்திற்கு ஏங்கி தவிக்கும்இவளுக்கு வீட்டில் எத்தனை பேர் பாசமாக பார்த்துக் கொண்டாலும், தந்தை போல் ஈடாகுமா என்பதே அவளின் கவலை. இவளுக்கு தந்தையிடம் கிடைக்காத பாசத்தை குடுக்க நினைக்கும் காதலன் யுவா. மீராவிற்கு தந்தையின் பாசம் கிடைக்குமா? என்பது தான் கதை.
also read : ஜீ தமிழின் புதிய சீரியலில் களமிறங்கும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்..
விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சீரியலில் வில்லி மேனகாவை அவளுடைய மருமகளும், மீராவின் தங்கையுமான ப்ரீத்தி வெளுத்து வாங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எப்படியாவது பிசினஸில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற போட்டியில் வில்லி மேனகா, அவருடைய மகனுக்கு கோடீஸ்வரர் கெளதமின் இரண்டாவது மகளான ப்ரீத்தியை திருமணம் செய்து வைக்கிறாள். அத்துடன் அவருடைய சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டு, வீட்டை வீட்டே வெளியே அனுப்புகிறாள்.
also read : மேக்கப் இல்லாமலே இவ்ளோ அழகா! வாணி போஜன் போட்டோஸ்
இந்த விஷயம் இப்போது ப்ரீத்திக்கு தெரியவந்துவிட்டது. இதனையடுத்து நடு வீட்டில் வைத்து மேனகாவை ப்ரீத்தி வெளுத்து வாங்குகிறார்.பிசினஸில் கஷ்டப்பட்டு உழைத்து முதலிடம் பிடிக்க முடியாத நீ, எங்க அப்பாவை ஏமாத்தி சொத்தை எல்லாம் புடுங்கி தான் பிசினஸ் வுமன் அப்படிங்கிற பேரோட வலம் வர்றேன்னு சகட்டுமேனிக்கு திட்டும் காட்சிகள் புரோமோ வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுவரை ப்ரீத்திக்கு உண்மை தெரியாமல் இருந்ததால் மீரா மற்றும் குடும்பத்தினர் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி வந்தனர். இப்போது உண்மை தெரிந்துவிட்டது. ப்ரீத்தி தனது அப்பாவிடம் சொத்துக்கள் அனைத்தையும் திரும்ப தருவாரா? இல்லை மேனகா பழிக்கு பழிவாங்க வேறு என்ன மாதிரியான காய் நகர்த்தப்போகிறார் என்ற பரபரப்புடன் ரசிகர்கள் வர உள்ள எபிசோட்டைக் காண காத்திருக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.