முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Kannana Kanne: யமுனாவுக்கு தெரிய வந்த உண்மை - என்னவாகும் மீரா-யுவா காதல்?

Kannana Kanne: யமுனாவுக்கு தெரிய வந்த உண்மை - என்னவாகும் மீரா-யுவா காதல்?

கண்ணான கண்ணே சீரியல்

கண்ணான கண்ணே சீரியல்

அப்பாவின் அன்புக்கு ஏங்கும் மீரா மீது அன்பாக இருக்கிறான் யுவா. ஆனால் வீட்டில் யுவாவுக்கும் ப்ரீத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் யுவா யாரை திருமணம் செய்துக் கொள்வான் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சன் டிவி-யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’கண்ணான கண்ணே’. இதில் நிமேஷிகா, ராகுல் ரவி, நித்யா தாஸ், ப்ரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மீரா பிரந்ததுமே தனது காதல் மனைவி கெளசல்யா இறந்து விட்டதால், அவளை சுத்தமாக வெறுக்கிறார் மீராவின் அப்பா கெளதம். பின்னர் யமுனாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார். அவர்களுக்கு பிரீத்தி என்ற மகள் இருக்கிறார். பிரீத்தி மீது அன்பாக இருக்கும் கெளதம் மீராவை கண்டு கொள்ளவே மாட்டார்.

அப்பாவின் அன்புக்கு ஏங்கும் மீரா மீது அன்பாக இருக்கிறான் யுவா. ஆனால் வீட்டில் யுவாவுக்கும் ப்ரீத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. தனது அப்பாவின் முடிவு என்பதால் காதலை தியாகம் செய்ய முன் வருகிறாள் மீரா. மீராவும், யுவாவும் காதலிக்கும் விஷயம் பிரீத்திக்கும் தெரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

' isDesktop="true" id="504297" youtubeid="HDa45LD8iE8" category="television">

இந்நிலையில் தற்போது பிரீத்திக்கும் யுவாவுக்கும் திருமணம் நடக்குமா அல்லது யுவாவுக்கு மீராவுக்கும் திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் சன் டிவி வெளியிட்டுள்ள ப்ரோமோவில், உண்மை தெரிந்த யமுனா, மீராவிடம் வந்து, ”உண்மையை என் கிட்ட மறச்சிட்ட” எனக் கேட்கிறார். அதற்கு “நா என்னம்மா மறச்சேன்” என அழுகிறாள் மீரா.

”சமாளிக்காத... நீ வாழ வேண்டிய வாழ்க்கைடி இது. நீ கை பிடிக்க வேண்டிய மாப்பிளை யுவா. நீ எப்படி பிரீத்திக்கு விட்டுக் கொடுக்கலாம். உன் மனசுல இருக்குறது வாசுகிக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா நானும் பிரீத்தியும் மட்டும் தெரிஞ்சுக்காம பைத்தியக்காரி மாதிரி இருந்திருக்கோம்” என கோபத்தில் கத்துகிறார் யமுனா. அப்போது ”எனக்கு தெரியும்மா” என்கிறாள் பிரீத்தி.

இது கனவா இல்லை உண்மை தானா... அப்படியானால் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Sun TV