• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பயத்தில் ஓடிய கண்ணான கண்ணே சீரியல் நடிகை நிமிஷிகா - வைரல் வீடியோ!

பயத்தில் ஓடிய கண்ணான கண்ணே சீரியல் நடிகை நிமிஷிகா - வைரல் வீடியோ!

நடிகை நிமிஷிகா

நடிகை நிமிஷிகா

நடிகை நிமிஷா, பப்லு உள்ளிட்டோர் கண்ணான கண்ணே சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது ஷேர் செய்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை பப்லு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

  • Share this:
சன்டிவியில் ஹிட் சீரியல் வரிசையில் ரோஜாவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது கண்ணான கண்ணே சீரியல். இதில் மற்ற கதைகளில் இருந்து மாறுபட்ட கதையம்சம் உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு பெருகி வருகிறது. சீரியலின் நாயகி மற்றும் நாயகன் வேடத்தில் யுவா- மீரா நடிக்கின்றனர். மீராவின் அப்பாவாக பப்லு பிருத்விராஜ் நடிக்கிறார். பப்லு பிருத்விராஜ் பல்வேறு படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் டான்சரும் ஆவார்.

அப்பா மற்றும் மகளுக்கு இடையில் உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை நகர்கிறது. மீரா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை நிமிஷிகா. இந்த சீரியலில் நிமிஷா, அப்பாவின் பாசத்திற்கு ஏங்கும் மகளாக நடித்து கொண்டிருக்கின்றார். இவர் ஆந்திரா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். படிப்பிற்காக கோவைக்கு வந்தவர், அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து இருக்கிறார். முன்னதாக மலையாளத்திலும் சில சீரியல்களிலும் இவர் நடித்திருந்தாலும், நிமிஷிகாவிற்கு ரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது கண்ணான கண்ணே சீரியல் தான். இதற்கு இந்த சீரியலில் இவருக்கு யுவாவுடன் திருமணம் ஆகியுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பிரச்னைகளுடன் கதை தொடர்க்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போது சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். தங்களுக்கு பிடித்த சீரியல் நடிகைகளுக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆர்மி பக்கங்களை ஆரம்பித்து தினந்தோறும் இவரது புகைப்படத்தை வெளியிட்டு தனது அன்பு மழையை பொழிந்து வருகின்றனர்.

Also read... இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்ற ஷிவாங்கி - ரசிகர்களுக்கு நன்றி!

குறிப்பாக கொரோனா காலத்தில் பெரும்பாலான நடிகைகள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஷேர் செய்து எப்போதும் ஆக்டிவாக இருந்தனர். அப்படி பிரபலமானவர்களில் நிமிஷாவும் ஒருவர். அதில் அவர் சில கவர்ச்சியான புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ள நிலையில், நிமிஷாவின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.



 




View this post on Instagram





 

A post shared by Babloo Prithiveeraj (@prithiveeraj)






நடிகை நிமிஷா, பப்லு உள்ளிட்டோர் கண்ணான கண்ணே சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது ஷேர் செய்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை பப்லு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அப்பாவாக நடிக்கும் பப்லு நிமிஷாவை பயமுறுத்தும் வகையில் படுத்துக்கொண்டு பாம்பு போல் ஊர்ந்து வந்து அவருடைய காலை சீண்டியதும், நிமிஷா அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நிமிஷாவின் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: