முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் பிரபல சீரியல்?

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் பிரபல சீரியல்?

கண்ணான கண்ணே சீரியல்

கண்ணான கண்ணே சீரியல்

இதில் கெளதமின் முதல் மனைவி கெளசல்யாவாக நடிகை இனியா நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் விரைவில் முடிவடையவிருக்கிறது.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் நவம்பர் 2020-ல் ஒளிபரப்பை தொடங்கியது. இந்தத் தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன், ராகுல் ரவி மற்றும் பப்லூ பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் தொடர் தெலுங்கு தொலைக்காட்சி தொடரான பௌர்ணமியின் ரீமேக் ஆகும்.

கௌதம் மற்றும் கௌசல்யா தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். கௌசல்யா இறுதியாக கர்ப்பமாகிறார், ஆனால் அது பல சிக்கல்களை உருவாக்குகிறது. வளைகாப்பின் போது கௌதம் இதைப் பற்றி அறிந்து குழந்தை வேண்டாம் என்கிறார். ஆனால் கௌசல்யா குழந்தையைப் பெற விரும்புகிறார். பெண் குழந்தையைப் பெற்ற பிறகு அவள் இறந்துவிடுகிறாள். மனைவியின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத கௌதம், தனது குழந்தையை வெறுக்கிறான். இது தான் கண்ணான கண்ணே சீரியலின் கதைகளம். இதில் கெளதமின் முதல் மனைவி கெளசல்யாவாக நடிகை இனியா நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கண்ணான கண்ணே சீரியல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 700 எபிசோட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் முடிவடைவது அறிந்து சோகத்தில் இருக்கிறார்கள் கண்ணான கண்ணே ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial