ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விரைவில் முடிவடையும் சன் டிவி-யின் பிரபல சீரியல்

விரைவில் முடிவடையும் சன் டிவி-யின் பிரபல சீரியல்

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

மீராவை வெறுக்கும் தந்தையாக பிரித்விராஜும், அப்பாவின் பாசம் கிடைக்காதா? என ஏங்கும் மகளாக மீரா ரோலில் நிமிஷிகாவும் நடித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் முடிவை நோக்கி நகர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல், தெலுங்கில் வெளியான 'பௌர்ணமி' மற்றும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

இதில் நிமிஷிகா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கண்ணான கண்ணே தொடரில் கெளதம் என்ற தந்தை கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க, அவரின் மகளாக புதுமுக நடிகை நிமிஷிகா, மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராகுல் ரவி என்பவர் 'யுவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வாரிசு படத்தில் குஷ்பு எங்கே? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

மீராவை வெறுக்கும் தந்தையாக பிரித்விராஜும், அப்பாவின் பாசம் கிடைக்காதா? என ஏங்கும் மகளாக மீரா ரோலில் நிமிஷிகாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவை நோக்கி நகர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் கண்ணான கண்ணே சீரியல் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial