• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சன் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம் - குவியும் வாழ்த்துகள்

சன் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம் - குவியும் வாழ்த்துகள்

நடிகை கீதா அஞ்சலி திருமணம்

நடிகை கீதா அஞ்சலி திருமணம்

சீரியல் நடிகை கீதாஞ்சலி தனது திருமண புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் புகழ் பெற்றவர் திருமுருகன். இவர் இயக்கும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் இயக்கிய கடைசி சீரியல் ‘கல்யாண வீடு’. இத்தொடரில் திருமுருகன் நாயகனாக நடிக்க அவருடன் நடிகர் மௌலி, ஸ்பூர்த்தி கவுடா, ஆர்.சுந்தர்ராஜன், ரம்யா, சவிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இத்தொடரில் திருமுருகனுக்கு ஜோடியாக நடித்த ஸ்பூர்த்தி கவுடாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்தக் கதாபாத்திரத்தில் கன்னிகா ரவி நடித்து வந்தார். 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் 600-க்கும் மேற்பட்ட எபிசோட்களைக் கடந்து 2020-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இத்தொடரில் நடித்த நடிகை கீதாஞ்சலிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



 




View this post on Instagram





 

A post shared by Geetha Anjali (@geethu0603)






சோஷியல் மீடியாவில் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை சின்னத்திரை பிரபலங்களும் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: