முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விபரீத முடிவெடுத்த ஆதிரை... இரக்கம் இல்லாத குணசேகரன் - பரபரப்பான எதிர்நீச்சல் சீரியல்!

விபரீத முடிவெடுத்த ஆதிரை... இரக்கம் இல்லாத குணசேகரன் - பரபரப்பான எதிர்நீச்சல் சீரியல்!

எதிர்நீச்சல் சீரியல்

எதிர்நீச்சல் சீரியல்

தங்கைக்கு என்ன ஆனதோ என்ற படபடப்பு கதிருக்குள் இருந்தாலும், அண்ணன் குணசேகரனன் பேச்சை கேட்டு அடங்கி விடுகிறான்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவி-யின் எதிர் நீச்சல் சீரியல் விறுவிறுப்பான கட்டங்களை எட்டியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் பலவகையான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், இன்று வரையிலும் பலரது நினைவை விட்டு நீங்காத சீரியலாக பார்வையாளர்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது கோலங்கள் சீரியல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயாணி நடிப்பில் வெளியான கோலங்கள் சீரியல் 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது. கோலங்கள் சீரியலை இயக்கியது மட்டுமில்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் திருச்செல்வம் நடித்திருந்தார். அபி என்கிற கதாபாத்திரத்தில் தேவயானியும், தொல்காப்பிம் கதாபாத்திரத்தில் திருச்செல்வமும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு தொடர் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் நடிகை ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர்.

இதில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மதுமிதா நடித்து வருகிறார். பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலைக்கு எதிராக எதிர்நீச்சல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் மருமகள்கள் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி நால்வரும் அப்பத்தாவின் உதவியோடு சுயமரியாதையுடன் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். பின்னர் இந்தப் பட்டியலில் ஜனனியின் கணவன் சக்தியும் இணைந்துக் கொண்டான். தன் தவறை உணர்ந்து, தனது மனைவிக்கும் அண்ணிக்களுக்கும் ஆதரவாக மாறினான்.

’மருந்து வாங்க பணம் இல்லை.. துரத்தும் வறுமை’ - பிதாமகன் தயாரிப்பாளரின் பரிதாப நிலை

அடுத்ததாக ஆதி குணசேகரனின் மூத்த தம்பி ஞானமும் தனது இத்தனை வருட வாழ்க்கையை யோசித்து, வீட்டு பெண்கள் பக்கம் வந்துவிடுகிறார். மூத்த தம்பியும், கடைக்குட்டி தம்பியும் தன்னை எதிர்த்ததால், அவர்கள் தனக்கு தம்பி இல்லை என்ற முடிவுக்கு வருகிறார் குணசேகரன். இளையதம்பி கதிர்வேல் மட்டும் தான் தனக்கு இனி எல்லாமும் என்ற எண்ணத்திற்கு வருகிறார்.

' isDesktop="true" id="905200" youtubeid="hDB4Es1L3Ew" category="television">

இதற்கிடையே அருணை கதிர் அடித்ததால் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிடுகிறாள் ஆதிரை. இதைப்பார்த்த குடும்பத்தினர் அலறி துடிக்கிறார்கள். ஆனால் குணசேகரனிடம் எந்த சலனமும் இல்லை. அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றப்படுகிறாள். ஆதிரையுடன் மருத்துவமனையில் சக்தி, ஜனனி, ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி, அருண் ஆகியோர் இருக்கிறார்கள். தங்கைக்கு என்ன ஆனதோ என்ற படபடப்பு கதிருக்குள் இருந்தாலும், அண்ணன் குணசேகரனன் பேச்சை கேட்டு அடங்கி விடுகிறான். எனவே அவர்கள் இருவர் மட்டும் ஆதிரை தற்கொலை முயற்சிக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் நடந்துக் கொள்கிறார்கள்.

' isDesktop="true" id="905200" youtubeid="itSOdxghPlw" category="television">

மருத்துவமனையில் இருக்கும் ஆதிரையை பார்க்க கரிகாலனும் அவனது அம்மா ஜான்சி ராணியும் அங்கு வருகிறார்கள். அவள் மீது அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். அப்போது அங்கு வரும் போலீசாரைப் பார்த்து பம்முகிறார்கள். இதை நோட் பண்ணும் ஜனனி இதன் பின்னணி என்னவாக இருக்கும் என யோசிக்கிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial