சன் தொலைக்காட்சியில் பலவகையான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், இன்று வரையிலும் பலரது நினைவை விட்டு நீங்காத சீரியல்கள் ஏராளம். அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயாணி நடிப்பில் வெளியான கோலங்கள் சீரியல் முக்கியமானது. 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கோலங்கள் சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இதில் கோலங்கள் சீரியலை இயக்கியது மட்டுமில்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் திருச்செல்வம் நடித்திருப்பார். இந்த சீரியலில் அபி என்கிற கதாபாத்திரத்தில் தேவயானியும், தொல்காப்பிம் கதாபாத்திரத்தில் திருச்செல்வமும் நடித்திருந்தனர்.
இதில் சாதாரண ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் தொழில் அதிபராக மாற எத்தனை கஷ்டங்களை சந்திக்கிறார், குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தில் இருப்பவர்களால் என்ன மாதிரியான பிரச்சனைகள் உருவாகிறது என்பதை திருச்செல்வம் அழகாக இயக்கி இருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சிக்கு சீரியல் இயக்கி வருகிறார்.
திருச்செல்வம் இயக்கத்தில் ‘எதிர்நீச்சல்’ என்ற சீரியல் கடந்த பிப்ரவரி மாதம் பிப்ரவரி 7ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை ஹரிப்பிரியா, டிடியின் அக்கா பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். அப்பாவிற்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டம் மற்றும் பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலைக்கு எதிராக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
இதில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மதுமிதா நடித்து வருகிறார். தற்போது ஜனனியின் திருமணம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் தற்போது நடைமுறையில் உள்ளது போல், மணப்பெண்ணை அழைத்து வரும் தோழிகள் லேட்டஸ்ட் பாட்டிற்கு நடனமாடியபடியே மணமேடைக்கு அழைத்து வருகின்றனர். இதனைப் பார்த்து கொந்தளித்து போன மணமகனின் அப்பா மாரிமுத்து ஆவேசம் அடைகிறார். கல்யாண வீட்டில் வந்து இப்படி ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்க என கோபமாக கத்துகிறார். இதெல்லாம் கல்யாண சடங்கில் இருக்கிறதா? பாரம்பரிய வழக்கத்தை மாற்றி இப்படியெல்லாம் ஆட்டம் போடலாமா? என மணப்பெண்ணையும், அவளுடைய தோழிகளையும் வெளுத்து வாங்குகிறார்.
Pandian Stores: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - நன்றி சொன்ன குழுவினர்!
அடுத்ததாக போட்டோகிராஃபரைப் பார்த்து போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காக திரும்பவும் தாலி கட்ட சொல்வியா? என அர்ச்சனை செய்கிறார். இந்த காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது வெட்டிங் போட்டோஷூட் மற்றும் தற்போது லேட்டஸ்ட் டிரெண்டாக உள்ள மணமகன், மணமகள் மேடைக்கு வரும் போது நண்பர்கள், உறவினர்கள் நடனமாடுவது போன்ற விஷயங்களை திருச்செல்வம் தனது சீரியல் மூலமாக விமர்சித்துள்ளார் என்ற கருத்து பரவி வருகிறது.
ஆனால் இதனை மறுத்துள்ள சீரியலின் இயக்குநர் திருச்செல்வம், தான் அதுபோன்ற அர்த்தத்தில் காட்சிகளை வைக்கவில்லை என்றும், பழமைவாதம் மிக்க வில்லன் கதாபாத்திரம் பேசும் படியான காட்சிகளை மட்டுமே வைத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். அந்த கதாபாத்திரம் இந்த கால இளைஞர்கள் குறித்த விஷயங்களை குறை கூறுவது போல் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சுமார் 20 எபிசோடுகளாகவே அந்த கதாபாத்திரத்தை அப்படி தான் காட்டி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அந்த கேரக்டரின் பிற்போக்குத் தனத்தை சாடுவதே இந்த கதையின் மையக்கரு என்றும், சீரியலை முழுமையாக பார்த்தவர்களுக்கு அது புரியும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.