ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சின்னத்திரையில் டீலா நோ டீலா ரிஷி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சின்னத்திரையில் டீலா நோ டீலா ரிஷி!

ரிஷி

ரிஷி

நினைத்தாலே இனிக்கும் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு ரீ எண்ட்ரியாகியிருக்கிறார் ரிஷி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ரிஷி மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளார்.

சினிமா, சீரியல் நடிகராகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் அறியப்படுபவர் நடிகர் ரிஷி. சன் டிவி-யில் டீலா நோ டீலா, கையில் ஒரு கோடி - ஆர் யூ ரெடி?, சூப்பர் சேலஞ்ச் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஆனந்த தாண்டவம், பயணம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். அதோடு தமிழ் மற்றும் தெலுங்கில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சிறிது காலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து விலகியிருந்த ரிஷி, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு ரீ எண்ட்ரியாகியிருக்கிறார்.

குயின் 2 படப்பிடிப்பு தள படங்களை பகிர்ந்த ரம்யா கிருஷ்ணன்!
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2021 ஆகஸ்ட் 23 முதல் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகர் ஆனந்த் செல்வன், பணக்கார குடும்பத்தில் பிறந்த சித்தார்த், என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வாதி ஷர்மா, பொம்மி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் சேதுபதி ஐபிஎஸ் ஆக களம் இறங்கியிருக்கிறார் ரிஷி.

First published:

Tags: Sun TV, TV Serial, Zee tamil