• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • கண்ணீர் சிந்தும் சித்தி 2 சீரியல் நடிகை.. கொரோனாவால் நேர்ந்த சோகம்!

கண்ணீர் சிந்தும் சித்தி 2 சீரியல் நடிகை.. கொரோனாவால் நேர்ந்த சோகம்!

சித்தி 2

சித்தி 2

காமெடி ஜர்னல் ரொம்ப பிடிக்கும். சித்தி 2-வில் அது கிடைத்தும் நிலைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.

 • Share this:
  சித்தி 2 சீரியல் நடிகை வீணா வெங்கடேஷ் இன்ஸ்டாவில் வருத்தம் மற்றும் சோகத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் 

  பல மாவட்டங்களில் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட, இன்னும் பல இடங்களில் சிறிதளவாவது தொற்று பரவல் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கோவிட் பாதிப்பு காரணமாக ஒரே நேரத்தில் 2 பிரபல சீரியல்களில் நடித்து கொண்டிருந்த வாய்ப்பை இழந்துள்ளார் சீரியல் நடிகை வீணா வெங்கடேஷ். இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 மற்றும் விஜய் டிவி-யின் காற்றுக்கென்ன வேலி ஆகிய பிரபல சீரியல்களில் நடித்து வந்தார்.

  சுப்புலக்ஷ்மியாக சித்தி 2-விலும், மீனாட்சியாக காற்றுக்கென்ன வேலியிலும் நடித்து வந்தார். 2 சீரியல்களிலும் ஒரே நேரத்தில் வாய்ப்பை இழந்துள்ளது பற்றி சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் வருத்தம் மற்றும் சோகத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை வீணா வெங்கடேஷ். அந்த வீடியோவில் வருத்தமுடன் அவர் பேசியிருப்பதாவது, " 2 அற்புதமான கேரக்டர்களையும், ப்ராஜக்ட்களையும் நான் இழந்து விட்டேன்.

  இதற்கு காரணம் கோவிட் பாசிட்டிவ். எனக்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நீங்கள் (ரசிகர்கள்) எனக்காக பிரார்த்தனை செய்தீர்கள். என்னை மிஸ் செய்தீர்கள். உடல்நிலை சரியான பின்பு மீண்டும் சுப்புலக்ஷ்மி மற்றும் மீனாட்சி கேரக்டரில் என்னை பார்க்க விரும்புவதாக நிறைய பேர் என்னிடம் மெசேஜ் மூலம் கூறி இருந்தீர்கள். இப்போது எல்லா அன்பையும், ஆதரவையும் இழந்து விட்டேன். 2 டீமும் எனது குடும்பம் போலவே இருந்தது.

  நான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட, 2 சீரியல் டீம்களுமே நான் குணமாகி விரைவில் ஷூட்டிங் வந்திடுவேன் என்றே காத்திருந்தார்கள். இன்னும் 2 நாள் வெயிட் பண்ணி இருந்தால் குறைந்தபட்சம் காற்றுக்கென்ன வேலி சீரியலிலாவது மீண்டும் இருந்திருப்பேன். ஆனால் அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. பாவம் அவர்களும் சீரியலில் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும் இல்லையா? யார் இருந்தாலும் இல்லை என்றாலும் ஷோவை ரன் செய்து தானே ஆக வேண்டும். எனக்கு மீனாட்சி மற்றும் சுப்புலக்ஷ்மி 2 கேரக்டர்கள் மீதும் மிகவும் ஈடுபாடு மற்றும் பொஸசிவ்னஸ் இருந்தது.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு பாதியில் போன லட்சுமி அம்மா.. மீண்டும் அழைத்த விஜய் டிவி!

  எனக்கு காமெடி ஜர்னல் ரொம்ப பிடிக்கும். சித்தி 2-வில் அது கிடைத்தும் நிலைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ரசிகர்களாகிய நீங்கள் நிறைய ஆதரவளித்தும் என்னுடைய போறாத காலம் இரண்டிலும் தொடர முடியவில்லை. இதனை நாள் எனக்கு வாய்ப்பு மற்றும் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி. இன்னும் எனக்கு ஒரு ஆசை இருக்கு. திடீர்னு ஒரு மிராக்கிள் நடந்து 2 சீரியல்களிலும் மீண்டும் என்னை நடிக கூப்பிட மாட்டார்களா என்று தோன்றுகிறது. மறுபடியும் அதே கேரக்டர்களில் நடிக்கும் தனது ஆசை நிறைவேறுவதற்கான வாய்ப்பு குறைவு.

  மிராக்கிள் நடந்தால் மட்டுமே நிறைவேறும். இது நடக்கவில்லை என்றால் வேறு ஒரு சீரியல் மூலம் நிச்சயம் உங்கள் முன் தோன்றுவேன் என நம்புகிறேன். அப்போதும் இதே போல உங்களை அன்பு ஆதரவை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். கோவிட் மூலம் என் கனவுகள் எல்லாம் சிதறி விட்டது. 2 மாதங்களில் அனைத்தையும் இழந்து விட்டேன். எனவே கோவிட்டை யாரும் சாதாரணமாக நினைத்து கொண்டிருக்காதீர்கள். கவனமுடனும், பாதுகாப்பாகவும் இருங்கள்.
  நான் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன். பொருளாதார நிலை மற்றும் மனநிலை என் எல்லாமே இந்த தொற்றால் நம்மை விட்டு போய்விடும். எனவே மாஸ்க் மற்றும் தடுப்பூசி போடுங்க, ஆரோக்கியம் முக்கியம், ஆரோக்கியம் இல்லை என்றால் எல்லாமே போய் விடும் என்பதற்கு நானே உதாரணம். நான் தடுப்பூசி போட்டு கொண்டும் பாதிக்கபட்டுள்ளேன். எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் எதிரிக்கும் இந்த நிலைமை வர கூடாது. மீண்டும் உங்களை எல்லாம் பார்க்க வருவேன் என நம்புகிறேன்" என்று கணீர் மல்க கூறி இருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: