காதலில் கசிந்துருகும் சித்தி 2 வெண்பா-கவின் ஜோடி - புதிய சீரியலில் ஒப்பந்தம்!

வெண்பா - கவின்

அதில் சுஷாந்த் - அஞ்சலி என்ற கதாபாத்திரங்களில் அவர்கள் நடிக்கிறார்கள்.

 • Share this:
  சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் ஜோடி கவின் - வெண்பா வேறொரு புதிய சீரியலிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள்.

  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ப்ரீத்தி ஷர்மா. தற்போது ராதிகாவின் சித்தி 2 சீரியலில் வெண்பாவாக நடித்து வருகிறார்.

  இதேபோல் வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் மூலம் அறிமுகமான நந்தன். பெரும் விமர்சனங்களை பெற்ற லட்சுமி என்ற குறும்படத்தில் ஹீரோவாக நடித்தவர். தற்போது சித்தி 2 சீரியலில் கவினாக நடித்து வருகிறார். சீரியலில் வெண்பா- கவின் ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களுக்கிடையே உள்ள ரொமான்ஸ் ரசிகர்களை மென்மேலும் அந்த சீரியலை பார்க்க தூண்டும்.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  தற்போது பிரீத்தி ஷர்மாவும், நந்தனும் புதிய சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார்கள். அதாவது சன் நெட்வொர்க்கின் தெலுங்கு சேனலான ஜெமினி டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காவ்யாஞ்சலி’ சீரியலில் தான் இவர்கள் நடித்து வருகிறார்கள். அதில் சுஷாந்த் - அஞ்சலி என்ற கதாபாத்திரங்களில் அவர்கள் நடிக்கிறார்கள்.

  இதைக் கேள்விப்பட்ட கவின் - வெண்பா ரசிகர்கள் தற்போது அந்த சீரியலையும் பார்த்து வருகிறார்கள். அதோடு, கவின் – வெண்பா, நந்தன் – ப்ரீத்தி, வின் – வெண் போன்ற ஹேஷ்டேக்குகளை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தி அவர்கள் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: