‘சித்தி 2’ சீரியலில் ராதிகா கேரக்டரில் நடிக்கிறேனா? - வரலட்சுமி சரத்குமார் பதில்

வரலட்சுமி | ராதிகா சரத்குமார்

‘சித்தி 2’ சீரியலில் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு வரலட்சுமி சரத்குமார் பதிலளித்துள்ளார்.

  • Share this:
1999-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ‘சித்தி’. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து மீண்டும் 2020-ம்ஆண்டின் தொடக்கத்தில் சித்தி 2 சீரியல் ஆரம்பமானது.

ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் கொரோனா பரவல் ஆரம்பிக்க படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு மீண்டும் 2020-ம் ஆண்டு  ஜூலை மாதத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கியது.

பொன்வண்ணன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும், நிகிலா ராவ் கேரக்டரில் காயத்ரி யுவராஜ், ஷில்பா நடித்திருந்த ரோலில் ஜெயலட்சுமியும் நடிக்க தற்போது புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சமீபத்தில் இத்தொடரிலிருந்து விலகுவதாக நடிகை ராதிகா சரத்குமார் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததாவது, “மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். 'சித்தி 2' மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். எனது கடின உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், என்னுடன் நடித்தவர்களிடமும் இருந்து சோகத்துடன் விடை பெறுகிறேன்.

ஆனால், சீரியல் தொடர வேண்டும். கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயரும் அக்கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபட்டது. இதனிடையே நடிகை வரலட்சுமி சரத்குமார் ராதிகாவின் கேரக்டரில் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து வரலட்சுமி சரத்குமாரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது அத்தகவலில் உண்மையில்லை என்றும், ராதிகா நடித்து வந்த கேரக்டரில் தான் நடிக்கவில்லை எனவும் பதிலளித்தார்.
Published by:Sheik Hanifah
First published: