• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Chithi 2 Venba: கழுத்தில் தாலியுடன் மணக்கோலத்தில் சித்தி 2 வெண்பா!

Chithi 2 Venba: கழுத்தில் தாலியுடன் மணக்கோலத்தில் சித்தி 2 வெண்பா!

வெண்பா

வெண்பா

தற்போது கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் இருக்கும் சித்தி 2 ப்ரீத்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

  • Share this:
    சித்தி 2 சீரியல் நடிகை வெண்பா கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் சில படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் வெண்பா என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தி சர்மா. முதன் முதலில் ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார் ப்ரீத்தி.

    அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்தார்.அந்த சீரியலில் இவர் அனிதா கேரக்டரில் நடித்திருந்தார். நவீனை உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக நடித்து இருந்ததால், நெட்டிசன்கள் மத்தியில் நவீன் – அனிதா ஜோடி பிரபலமாகியது.

    ஆனால் சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததால், தொடர்ந்து அவரால் திருமணம் சீரியலில் நடிக்க முடியவில்லை. பின்னர் திருமணம் சீரியலில் இருந்து வெளியேறி, சித்தி 2-வில் பிஸியானார். இந்த சீரியலில் கவின் - வெண்பா ஜோடி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். காதல், ரொமான்ஸ் என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது இந்த ஜோடி.

    சீரியலில் பிஸியாக இருந்தாலும் மறுபுறம் தனது விதவிதமான படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் ப்ரீத்தி. இந்நிலையில் தற்போது கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் இருக்கும் ப்ரீத்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள் ப்ரீத்திக்கு திருமணம் ஆகிவிட்டதா என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனால் இது வெறும் ஃபோட்டோஷூட் தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: