சன் டிவி சித்தி 2 சீரியலில் நடக்கவிருக்கும் பெரிய மாற்றம்

சித்தி 2

சித்தி 2 சீரியலில் புதிதாக ஒரு கதாபாத்திரம் வர இருப்பதாக சன் டிவி தெரிவித்துள்ளது.

  • Share this:
1999-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ‘சித்தி’. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து மீண்டும் 2020-ம்ஆண்டின் தொடக்கத்தில் சித்தி 2 சீரியல் ஆரம்பமானது.

ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் கொரோனா பரவல் ஆரம்பிக்க படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு மீண்டும் 2020-ம் ஆண்டு  ஜூலை மாதத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கியது.

பொன்வண்ணன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும், நிகிலா ராவ் கேரக்டரில் காயத்ரி யுவராஜ், ஷில்பா நடித்திருந்த ரோலில் ஜெயலட்சுமியும் நடிக்க தற்போது புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்தொடரிலிருந்து விலகுவதாக நடிகை ராதிகா சரத்குமார் அறிவித்தார்.

தனது கணவருடன் முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதால் தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக பேச்சு அடிபட்டது. இதைத்தொடர்ந்து கவின் - வெண்பா கதாபாத்திரங்களை மையப்படுத்தி கதை நகர்ந்து வரும் நிலையில் சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தி 2 தொடரில் புதிதாக வரப்போகும் அந்த நபர் யார் என்று ட்வீட் பதிவிட்டுள்ளது.புதிதாக வரப்போகும் நபர் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் புது எண்ட்ரியாக சீரியல் நாயகன் நந்தன் லோகநாதன் தான் இரட்டை வேடத்தில் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே வரும் நாட்களில் சித்தி 2 சீரியலில் பெரிய திருப்புமுனையும் மாற்றமும் ஏற்படும் என தெரிகிறது.
Published by:Sheik Hanifah
First published: