ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சித்தி 2 சீரியல் இறுதிநாள் படப்பிடிப்பு... வருத்தத்தில் ரசிகர்கள்...

சித்தி 2 சீரியல் இறுதிநாள் படப்பிடிப்பு... வருத்தத்தில் ரசிகர்கள்...

சித்தி 2

சித்தி 2

இதற்கிடையில், ராதிகா சரத்குமாரின் புதிய சீரியல் 'பொன்னி கேர்/ஆப் வாணி ராணி' விரைவில் கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சித்தி 2 சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது.

1996-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான பிரபல சீரியல் சித்தி 2. இந்தத் தொடரின் 2-ம் பாகம், 22 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் டிவி-யில் ஒளிபரப்பை தொடங்கியது. இப்போது, இந்தத் தொடர் விரைவில் முடிவடையும் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

சின்னத்திரை ரசிகர்களிடையே அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ராதிகா சரத்குமார், சித்தி 2 சீரியல் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தவிர, பொன்வண்ணன், ரூபிணி, மீரா வாசுதேவன், ஷில்பா, மகாலட்சுமி, நிகிலா ராவ், ப்ரீத்தி, அஷ்வின், ஜீவன் ரவி, அருள்மணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இருப்பினும் 200 எபிசோட்களுக்குப் பிறகு, சித்தி 2 சீரியலை விட்டு வெளியேறினார். ராதிகா வெளியேறியதும், சித்தி 2 சீரியலின் டிஆர்பி சரியத் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய்யுடன் மீண்டும் இணையும் வெற்றி இயக்குநர்?

தற்போது ப்ரீத்தி, நந்தன் ஆகியோரை முன்னிலைப்படுத்தி சித்தி 2 தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையில், ராதிகா சரத்குமாரின் புதிய சீரியல் 'பொன்னி கேர்/ஆப் வாணி ராணி' விரைவில் கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)தற்போது சித்தி 2 சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதில் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

First published:

Tags: Sun TV