சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை ராதிகா, தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 80 மற்றும் 90-களில் படு பிஸியாக வலம் அவர், திடீரென சினத்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அதில் பல வெற்றிகளையும் குவித்தார். அதில் ராதிகா நடித்த சித்தி சீரியல் மிக முக்கியமானது.
சித்தி சீரியலுக்கு மக்களிடையே இன்னும் வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்ட ராதிகா, சித்தி 2 சீரியலை தயாரித்தார். அந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சில எபிசோட்கள் நடித்த அவர் பின்னர் அதிலிருந்து விலகினார்.
1 வருடத்திற்கும் மேலாக சின்னத்திரையில் இருந்து ஒதுங்கியிருந்த ராதிகா தற்போது மீண்டும் புதிய சீரியலில் எண்ட்ரி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகின. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் பொன்னி என்ற சீரியலை ராதிகா தயாரித்து நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
பிளாக் அண்ட் ஒயிட் உடையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த தமன்னா!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது கவின் - வெண்பா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.