ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திடீரென முக்கிய சீரியல்களின் டைமிங்கை மாற்றிய சன் டிவி! காரணம் என்ன தெரியுமா?

திடீரென முக்கிய சீரியல்களின் டைமிங்கை மாற்றிய சன் டிவி! காரணம் என்ன தெரியுமா?

சன் டிவி சீரியல்கள்

சன் டிவி சீரியல்கள்

அனைத்து தமிழ் சேனல்களிலும் தமிழ் திரைப்படங்களின் பெயர்களை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் தற்போது எண்ணற்ற தனியார் சேனல்கள் இருக்கின்றன. எனினும் தென்னிந்தியாவின் முதல் தனியார் சேனலாக தொடங்கப்பட்டது முதல் இன்று வரை சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது சன் டிவி. ஒருகாலத்தில் சீரியல்கள் என்றாலே அது சன் டிவி சீரியல்கள் தான். சினிமாவை மட்டுமே பொழுதுபோக்காக கொண்டிருந்த மக்கள் மத்தியில் கமர்ஷியலாக மினி சீரியல்கள் முதல் மெகா சீரியல்கள் வரை அறிமுகப்படுத்தி டிவி வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய பெருமை சன் டிவி-க்கு உண்டு.

  அன்று முதல் இன்று வரை சன் டிவி சீரியல்களுக்கான மவுசு குறையாமல் இருந்து வருகிறது. தற்போது சன் டிவி-யில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஏகோபித்த ஆதரவிற்கு எடுத்துக்காட்டு,தற்போது இந்த சேனலில் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல். ஏனென்றால் தமிழ் சின்னத்திரை வரலாற்றிலேயே முதல் முறையாக 2000 எபிசோட்களை கடந்த மெகா சீரியல் என்ற சாதனையை படைத்து தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது சந்திரலேகா.

  அனைத்து தமிழ் சேனல்களிலும் தமிழ் திரைப்படங்களின் பெயர்களை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சன் டிவி-யிலும் தமிழ் படங்களின் பெயர்களை தாங்கிய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் பிரபல மூத்த நடிகை அம்பிகா மற்றும் பலர் நடிக்கும் "அருவி" என்ற புத்தம் புதிய சீரியல் சன் டிவி-யில் வரும் திங்கள் (அக்டோபர் 18) முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மாறுபட்ட எண்ணத்தில் இரு துருவங்களாக இருக்கும் இவர்கள் மாமியார் மருமகள் ஆனால்.! என்று அந்த ப்ரமோ காட்டப்படுகிறது. இந்த சீரியல் திங்கள் - சனி பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

  ' isDesktop="true" id="583717" youtubeid="Si0-BuNzsRY" category="television">

  இதனால் சன் டிவி-யின் சீரியல் டைமிங் ஸ்லாட்டில் நேர மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி பிற்பகல் 2.30 - 3.30 வரை ஒளிபரப்பாகி வந்த தாலாட்டு சீரியல், அடுத்த வராம் முதல் பிற்பகல் 3 - 3.30 வரை ஒளிபரப்பாக உள்ளது. வானத்தை போல சீரியல் திருமண கொண்டாட்டம் என்ற ஸ்பெஷல் ஷோவாக இரவு 7.30 - 8.30 வரை ஒளிபரப்பாக உள்ளதால், 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியலின் டைமிங் இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டு உளள்து. இதனை தொடர்ந்து சித்தி 2 சீரியல் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Sun TV, TV Serial