முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 7 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்... விரைவில் எண்ட் கார்டு?

7 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்... விரைவில் எண்ட் கார்டு?

சந்திரலேகா சீரியல்

சந்திரலேகா சீரியல்

சன் டிவி-யில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல் "சந்திரலேகா".

  • 1-MIN READ
  • Last Updated :

நீண்ட காலமாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சந்திரலேகா சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாசமான கதையமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையும் சீரியல்கள் மூலம் ரசிகர்களை பல ஆண்டுகளாக ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் சீரியல்களுக்கு பெயர் போன பிரபல முன்னணி சேனலான சன் டிவி, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள பல மெகாஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் சன் டிவி-யில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல் "சந்திரலேகா". இந்த சீரியல் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ம் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது. சரிகம நிறுவனம் தயாரிப்பில், டைரக்டர் ஏ.பி.ராஜேந்திரன் இயக்கி வரும் இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, ஜெய் தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

விஜய்யின் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது வரை 2250-க்கும் அதிகமான எபிசோட்களை கடந்திருக்கும் சந்திரலேகா சீரியல் விரைவில் முடிவடையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Sun TV, TV Serial