• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சின்னத்திரை வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த சன் டிவி சீரியல்!

சின்னத்திரை வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த சன் டிவி சீரியல்!

சந்திரலேகா சீரியல்

சந்திரலேகா சீரியல்

வித்தியாசமான கதை அமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையும் சீரியல்

  • Share this:
    தமிழ் சின்னத்திரை ரசிகர்களை டிவி சேனல்கள் முன் ஆர்வமாக உட்கார வைப்பதில் சீரியல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ரியாலிட்டி ஷோக்கள், பாட்டு மற்றும் டான்ஸ் ஷோக்கள், காமெடி ஷோக்கள் என வகை வகையாக தமிழ் சேனல்கள் போட்டி போட்டு கொண்டு பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் அவற்றைன் தினசரி டிஆர்பி ரேட்டிங்குகளை அதிகரிக்க செய்யவும், தக்க வைத்து கொள்ளவும் பெரிதும் உதவுபவை மெகா சீரியல்களே.

    வித்தியாசமான கதை அமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையும் சீரியல்கள் மூலம் ரசிகர்களை பல ஆண்டுகளாக ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் சீரியல்களுக்கு பெயர் போன பிரபல முன்னணி சேனலான சன் டிவி, சின்னத்திரை வரலாற்றிலேயே மிக பெரிய சாதனை ஒன்றை செய்து இருக்கிறது. உலக தமிழர்களின் அபிமான சேனலாக இருந்து வரும் சன் டிவி , தற்போது வரை சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள பல மெகாஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

    அந்த வகையில் சன் டிவி-யில் கடந்த 7 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல் "சந்திரலேகா". இந்த சீரியல் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி துவக்கப்பட்டது. இன்றுடன் இந்த சீரியல் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நிலையில் சரியாக 7-ஆம் ஆண்டை நிறைவு செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பு தமிழ் சின்னத்திரை வரலாற்றில் இதுவரை எந்த சீரியலும் செய்யாத மிகப்பெரிய சாதனையை சந்திரலேகா சீரியல் செய்துள்ளது.

    நேற்று (5.10.21) ஒளிபரப்பான 2000-ஆவது எபிசோட் மூலம் தமிழ் சின்னத்திரை வரலாற்றில் அதிக எபிசோட்களை கடந்த வெற்றிகரமான சீரியலாகி இருக்கிறது சன் டிவி-யின் சந்திரலேகா சீரியல். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ் டிவி வரலாற்றில் அதிக எபிசோட்களை கடந்த வெற்றிகரமான சீரியல்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வள்ளி சீரியலை (1961 எபிசோட்) பின்னுக்கு தள்ளி சந்திரலேகா வெற்றிகரமாக முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோட்கள் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள சந்திரலேகா சீரியல், தற்போது 2000 எபிசோட்களை கடந்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

    இதனை தொடர்ந்து பெரும் உற்சாகத்தில் இருக்கும் சீரியல் தயாரிப்பு நிர்வாகம், நடிகர்கள் மற்றும் பிற குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 2000 எபிசோடுகளை எட்டிய முதல் தமிழ் சீரியல், தமிழ் சீரியல்களில் இது ஒரு தனி வரலாற்று சாதனை, சந்திரலேகா டீம் மற்றும் சன் டிவி-க்கு வாழ்த்துக்கள் என்று சின்னத்திரை ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் நடிக்கும் நடிகர்களும் தங்கள் மகிழ்ச்சியை இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் ரசிகர்களிடையே ஷேர் செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: