சன் டிவி, விஜய் டிவி சீரியல் நடிகர்கள் இணைந்து நடிக்கும் புதிய படம்!

சன் டிவி, விஜய் டிவி சீரியல் நடிகர்கள் இணைந்து நடிக்கும் புதிய படம்!

முன்னறிவான் பட பூஜை

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக இயக்கப்படும் இந்தப் படத்தில் பரத், ஜனனி ஐயர் முன்னணி நடிகர்களாக நடிக்கின்றனர்.

 • Share this:
  நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்தில் சன் டிவி மற்றும் விஜய் டிவி நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

  லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற பேனரின் கீழ் பல பிரபலமான படங்களை தயாரித்துள்ளார். நளனும் நந்தினியும் படத்தை தயாரித்த அவர், விஜய் டிவி கவின் அறிமுகமான ’நட்புனா என்னான்னு தெரியுமா’ படத்தைத் தயாரித்தார். யோகி பாபு நடித்த கூர்க்கா படத்தைத் தொடர்ந்து தற்போது சாந்துவின் முருங்கக்காய் சிப்ஸ் படத்தை தனது கைவசம் வைத்துள்ளார்.

  தமிழ் ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர பார்வையாளரான ரவீந்தர் சந்திரசேகர், அதனை விமர்சனம் செய்தும் வந்தார். தற்போது மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்ற படத்தை இயக்குகிறார்.

  தற்போது லிப்ரா புரொடக்‌ஷனின் புதிய அலுவலகத்தை திறந்துள்ள தனது அடுத்தப்பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். 'முன்னறிவான்' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஜயராஜ் இயக்குகிறார். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக இயக்கப்படும் இந்தப் படத்தில் பரத், ஜனனி ஐயர் முன்னணி நடிகர்களாக நடிக்கின்றனர்.

  இவர்களுடன் விஜய் டிவி புகழ் மிர்ச்சி செந்தில், அஸார், சன் டிவி சித்தி 2 சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: