Home /News /entertainment /

பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி ஆங்கர் தியா.. குவியும் வாழ்த்துக்கள்!

பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி ஆங்கர் தியா.. குவியும் வாழ்த்துக்கள்!

ஆங்கர் தியா

ஆங்கர் தியா

கணவர் மற்றும் குழந்தையுடன் தியா ஆஸ்பிட்டலில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இளவரசி வந்து விட்டாள் என்று கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சன் டிவி ஆங்கர் தியா மேனனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை புகைப்படத்துடன் தியா உறுதி செய்துள்ளார்.

    சன் டிவி மற்றும் விஜய் டிவியில் இருக்கும் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியின் மாபெரும் சொத்தாக இருந்து வருபவர் ஆங்கர் தியா மேனன். சன் டிவியில் “சூப்பர் சேலஞ்ச்’ மற்றும் “கிரேஸி கண்மணி’ நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் நடத்தினார்.சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி புகழின் உச்சத்திற்கு சென்றார். தியாவுக்கு சிங்கப்பூரில் உள்ள கார்த்திக் மீது காதல் வர பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.



    விஜய் டிவி கொடுத்த அதிர்ச்சி.. அழுது தீர்த்த ஆங்கர் பிரியங்கா!

    பத்தாவது படிக்கும்போதே தொகுப்பாளராக அறிமுகமான தியா, மலையாள சேனல்களில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போதே டிவி விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீடியாவில் தொகுப்பாளினியாக வேலை செய்தார். மலையாளத்தில் நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியுள்ள தியா எம்.பி.ஏ முடித்திருக்கிறார். சன் டிவியில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர் திருமணத்திற்கு பிறகு கணவருடன் சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்டார்.

    அடுத்த லெவலுக்கு சென்ற சூப்பர் சிங்கர் பிரியங்கா! விஷயம் தெரியுமா?

    தற்போது தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தியா தனது கர்ப்பம் குறித்து அறிவித்தார். இதற்கு வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இந்நிலையில் அவரின் வளைகாப்பும் சிறப்பாக நடைப்பெற்றது. இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Diya Vj (@diya_menon_official)






    இந்நிலையில் தியா மேனனுக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது. கணவர் மற்றும் குழந்தையுடன் தியா ஆஸ்பிட்டலில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இளவரசி வந்து விட்டாள் என்று கூறியுள்ளார். மேலும் தனக்காக பிரே செய்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி