• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியல் ரசிகர்களை குஷியாக்கிய சன் டிவி-யின் புதிய அறிவிப்பு!

சீரியல் ரசிகர்களை குஷியாக்கிய சன் டிவி-யின் புதிய அறிவிப்பு!

அன்பே வா சீரியல்

அன்பே வா சீரியல்

மாஸ்டர் செஃப் காரணமாக அன்பே வா, பூவே உனக்காக, சித்தி 2 ஆகிய மூன்று சீரியல்களின் ஒளிபரப்பு மட்டும் சனிக்கிழமைகளில் நிறுத்தப்பட்டிருந்தது.

  • Share this:
    சின்னத்திரை ரசிகர்களுக்கு புதுமையான மற்றும் வித்தியாசமான அனுபவங்களை வழங்கவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் தமிழ்கத்தில் இருக்கும் பிரபல சேனல்கள் போட்டி போட்டு கொண்டு சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகின்றன. அந்த வகையில் பெருமபாலான முன்னணி தமிழ் டிவி சேனல்கள் பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி ரசிகர்களை குதூகலிக்க வைத்து வருகின்றன. இதற்கு மக்களின் அபிமானம் பெற்ற சன் டிவியும் விதி விலகல்ல.

    ஏற்கனவே சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் எண்ணற்ற சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவையாக ஹிட் லிஸ்ட்டில் இருந்து வருகின்றன. தற்போது எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகும் புதிய சீரியல்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பழைய சீரியல்களையும் சன் டிவி ஒளிபரப்பி வருகிறது. அத்திப்பூக்கள், உதிரிபூக்கள், மெட்டிஒலி உள்ளிட்ட சீரியல்களை இன்னும் ரசிகர்கள் புதிய சீரியலை பார்ப்பது போலவே பார்ப்பதால் சன் டிவி-யின் TRP உயர்ந்துள்ளது.

    இவை தவிர தற்போது சன் டிவி-யில் மகராசி, திருமகள், பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, அன்பே வா, பூவே உனக்காக, சித்தி 2 உள்ளிட்ட சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் குக்கிங் ரியாலிட்டி ஷோவான மாஸ்டர் செஃப் என்ற பிரமாண்ட சமையல் ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்ப துவங்கியது. இந்த ஷோவை பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

    இந்த பிரமாண்டமான குக்கிங் ரியாலிட்டி ஷோ வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. கடந்த வாரத்துடன் மாஸ்டர் செஃப் ரியாலிட்டி ஷோ வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனிடையே ஏற்கனவே நாம் மேலே பார்த்த சீரியல்கள் அனைத்தும் திங்கள் - சனி வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில், மாஸ்டர் செஃப் காரணமாக அன்பே வா, பூவே உனக்காக, சித்தி 2 ஆகிய மூன்று சீரியல்களின் ஒளிபரப்பு மட்டும் சனிக்கிழமைகளில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by SunTV (@suntv)






    தற்போது மாஸ்டர் செஃப் முடிந்து விட்டதால் மேற்சொன்ன அன்பே வா, பூவே உனக்காக, சித்தி 2 ஆகிய 3 சீரியல்களும் வரும் 20-ம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மீண்டும் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாக்களில் சன் டிவி ஷேர் செய்து இருக்கிறது. இதனால் இந்த சீரியல்களின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: