சின்னத்திரையில் ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்து வருபவற்றில் ரியாலிட்டி ஷோக்களும், சீரியல்களும் முக்கிய இடம் பிடித்து உள்ளன.
சினிமாவை போலவே சீரியல்களும் வித்தியாசமான கதைக்களம் மற்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றன. முன்பெல்லாம் சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகள் மற்றும் வயதானோர் பார்க்கும் டிவி நிகழ்ச்சி என்று இருந்தது. அந்த பிம்பம் சிறிது சிறிதாக மாறி இன்று அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் வித விதமான கதைக்களத்தில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
தமிழகத்தில் சீரியல்களை ஒளிபரப்பி அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள முக்கிய 2 சேனல்கள் சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி தான். ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், ஜெயா டிவி என பல சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இந்த 2 சேனல்களின் சீரியல்கள் மட்டுமே பல ஆண்டுகளாக TRP ரேட்டிங் லிஸ்ட்டில் டாப் 5 இடங்களை மாறி மாறி பிடித்து வருகின்றன. இதனிடையே கலைஞர் டிவியில் சன் டிவி-யின் பிளாக் பஸ்டர் சீரியலான தெய்வமகள் உட்பட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
விரைவில் புதிய சீரியல் ஒன்றை களமிறக்க உள்ளது கலைஞர் டிவி. திரைப்படங்களின் பெயரை தாங்கி வரும் சீரியல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதால் புதிய சீரியலுக்கு "கண்ணெதிரே தோன்றினாள்" என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தம் புதிய சீரியல் மூலம் சன் டிவி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை கலைஞர் டிவி-யில் அறிமுகம் ஆக உள்ளார்.
சன் டிவி-யில் காலை முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி 2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல்,கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா, உள்ளிட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.
Also Read : வெள்ளித்திரையில் டானாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்!
இதில் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து சூப்பர் ஹிட்டாக ஓடி கொண்டிருக்கும் வானத்தை போல சீரியலில் துளசி கேரக்டரில் இருந்து பாதியில் வெளியேறிய நடிகை ஸ்வேதா, கண்ணெதிரே தோன்றினாள் சீரியலில் நாயகியாக நடிக்கிறார். இந்த புதிய சீரியல் தொடரான ப்ரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் கலைஞர் டிவி-யில் கண்ணெதிரே தோன்றினாள் டெலிகாஸ்ட்டாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கண்ணெதிரே தோன்றினாள் சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் நடிகை ஸ்வேதா நடிக்கிறார். மேலும் இந்த சீரியலில் KGF புகழ் நடிகை மாளவிகா அவினாஷ் நடித்திருப்பதும், சதியினால் பிரிந்த தொப்புள் கோடி உறவு விதியினால் ஒன்று சேருமா.? என்ற கேள்வியுடன் முடிவடையும் ப்ரமோ வீடியோவும் ரசிகர்களிடையே கண்ணெதிரே தோன்றினாள் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.