ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சன் மியூசிக் விஜே அனன்யாவின் சிம்பிள் மேரேஜ்... ரசிகர்கள் வாழ்த்து!

சன் மியூசிக் விஜே அனன்யாவின் சிம்பிள் மேரேஜ்... ரசிகர்கள் வாழ்த்து!

விஜே அனன்யா

விஜே அனன்யா

விஜே அனன்யா தனது கணவருடன் நடந்து வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சின்னத்திரையில் அன்று முதல் இன்று வரை இளசுகளுக்கு மிகவும் பிடித்தமான ஃபேவரைட் சேனல் என்றால் அது சன் மியூசிக் தான். அத்தகைய சேனலில் விஜே-வாக பணிபுரிந்த பலர் மக்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமடைந்தவர்களாக உள்ளனர். அப்படி சன் மியூஸிக்கில் பணிபுரிந்து பிரபலமானவர் தான் விஜே அனன்யா. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று பிறந்த இவர் ஊட்டியில் வளர்ந்தார். சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கிய இவர், தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையிலும் தடம் பதித்துள்ளார்.

இவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஏப்ரல் 11, 2018 முதல் ஜூன் 28, 2019 வரை ஒளிபரப்பான "வந்தாள் ஸ்ரீதேவி" சீரியல் மூலம் முதன் முறையாக சின்னத்திரை நடிகையாக ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நந்தன் லோகநாதன் மற்றும் லாஸ்யா நாகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரையில் கால் பதித்திருந்தாலும் வெள்ளித்திரையில் பெரிய முன்னணி நடிகையாக வேண்டும் என்பதே இவரின் லட்சியமாக இருந்தது.

அதற்கேற்ப இவர் பைரவா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுன் கல்லூரி தோழியாக சில காட்சிகளில் நடித்தார். இது தவிர நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த சங்கத்தமிழன் திரைப்படத்தில் பாக்யலட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதன் பிறகு வெள்ளித்திரையில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், சினிமாவில் தனக்கென ஒரு தனிமுத்திரையை பதிக்க வேண்டும் என்பதே இவரது குறிக்கோளாக இருக்கிறது. இதற்காக இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது ஷேர் செய்வது வழக்கம்.

மியூசிக் வீடியோ, ஆல்பம் சாங் என்று ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் வெள்ளித்திரை வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனது கனவை நனவாக்கி கொள்ளும் விதமாக நடிகை அனன்யா மணிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஹாரூன் இயக்கத்தில், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடிக்கும் வெப் (WEB) என்ற திரைப்படத்தில் நடிகை அனன்யா மணி முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ட்விட்டரில் KSK Selva PRO என்பவர் இது தொடர்பான தகவலை ரீட்விட் செய்திருந்தார். மேலும், அவரது பட வாய்ப்புக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)இதனிடையே, தற்போது நடிகை அனன்யா யாருக்கும் சொல்லாமல், மிக எளிமையாக தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். திடீரென திருமணம் செய்துகொண்டது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை தந்திருந்தாலும், பலர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கோயிலில் மிக எளிமையாக திருமணத்தை முடித்துக்கொண்டு, தன் கணவருடன் நடந்து வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial