90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

ஆனந்த கண்ணன்

மீண்டும் சிங்கப்பூர் சென்ற ஆனந்த கண்ணன், அங்கு வசந்தம் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

 • Share this:
  0’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் தொகுப்பாளராக திகழ்ந்த ஆனந்த கண்ணன் நேற்றிரவு மரணமடைந்தார்.

  சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன், சிங்கப்பூரில் பிரபலமான வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் அங்கிருந்து சென்னை வந்த அவர் 90-களின் இறுதியில் சன் குழுமத்தில் இணைந்தார். சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ ஆகிய தொடர்களில் நடித்த ஆனந்த கண்ணன், பின்னர் சன் மியூசிக் தொலைகாட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார்.

  அவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் பாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் உருவானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தனியார் நிகழ்ச்சிகளையும் (ஈவெண்ட்) தொகுத்து வழங்கினார். அதோடு தொலைக்காட்சி தொகுப்பாளராக வேண்டும் என நினைப்பவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து மீண்டும் சிங்கப்பூர் சென்ற ஆனந்த கண்ணன், அங்கு வசந்தம் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்றிரவு காலமானார். இது தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: