Home /News /entertainment /

சன் குடும்ப விருது வழங்கும் விழாவில் ரோஜா சீரியல் அர்ஜுனுக்கு கிடைத்த அங்கீகாரம்...

சன் குடும்ப விருது வழங்கும் விழாவில் ரோஜா சீரியல் அர்ஜுனுக்கு கிடைத்த அங்கீகாரம்...

சிபு சூரியன்

சிபு சூரியன்

சன் குடும்ப விருதில் மிகவும் பிடித்தமான கதாநாயகன் என்கிற விருதை அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபு பெற்றுள்ளார்.

பல விருது நிகழ்ச்சிகளை சினிமா துறையில் அவ்வப்போது கண்டு வருகிறோம். பொதுவாக இது போன்று விருது வழங்குவதால் தனது திறமையின் மீது அந்த நபருக்கு மேலும் அதிக நம்பிக்கை தோன்றி, பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் பிறக்கும். ஒருவரின் திறமையை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக விருதுகள், பாராட்டுகள், பரிசுகள் போன்றவை சிறந்த வழியாக உள்ளன. அந்த வகையில் வெள்ளித்திரையில் சாதனை செய்வோர்களை பாராட்டும் விதமாக பல விருதுகளை வழங்கி கவுரவிப்பார்கள்.

அதே போன்று சின்னத்திரையிலும் நாடகங்கள் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளில் தனது திறமைகளை அற்புதமாக வெளிக்காட்டுபவர்களை பாராட்டும் விதமாக விருது நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றனர். அதன்படி விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி ஆகிய தொலைக்காட்சி சேனல்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மக்களின் மனதை கவர்ந்த பல பிரபலங்களுக்கு விருதுகளை வழங்கி உள்ளது.

சிறந்த தொடர், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, சிறந்த வில்லி, சிறந்த வில்லன், சிறந்த ஜோடி, சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த குழந்தை நட்சத்திரம் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற சன் குடும்பம் விருதுகள் வழக்கம் போலவே மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் மக்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் என்கிற விருதை ரோஜா தொடரின் சிபு சூரியன் பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்னரே சில முறை சன் தொலைக்காட்சி நடத்திய பல சன் குடும்ப விருதுகளை தட்டி சென்றுள்ளார்.



also read :1980-களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி ஸ்ரீஜா!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ரோஜா தொடரும் ஒன்று. இத்தொடரில் சிபு சூரியன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியங்கா நடிக்கிறார். இந்த சீரியல் தற்போது பல எபிசோட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த தொடரின் வெற்றிக்கு மக்களின் ஆதரவு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. பலர் ஒரு நாள் கூட தவற விடாமல் ரோஜா சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த சீரியல் மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறி இருக்கிறது.

 



 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)





also read : ஆபாச வீடியோக்களை அனுப்புகின்றனர்: கடும் நடவடிக்கை வேண்டும் - நடிகர் நகுலின் மனைவி வேதனை



குறிப்பாக இதில் நடிக்கும் சிபு சூரியன் மற்றும் ப்ரியங்கா ஆகியோருக்காகவே இந்த சீரியலை பலர் பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அதே போன்று பல பெண்களுக்கு சிபு சூரியனை மிகவும் பிடிக்கும். இவருக்கென்று தனி பெண் ரசிகைகள் உள்ளனர். இந்த பேராதரவால் தான் இவர் 2019 ஆம் ஆண்டில் சன் குடும்ப விருதை பெற்றார். அதே மக்களின் ஆதரவால் தான் தற்போது மீண்டும் 2022 ஆம் ஆண்டிலும் மிகவும் பிடித்தமான கதாநாயகன் என்கிற விருதை அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபு பெற்றுள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Sun TV, TV Serial

அடுத்த செய்தி