பிபி ஜோடிகள் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் ஜெயித்துள்ள சுஜா - சிவா ஜோடிக்கு போட்டியின் நடுவில் மிகப் பெரிய சோகம் அரங்கேறியுள்ளது. இதுக் குறித்து இருவரும் முதன்முறையாக மனம் திறந்துள்ளனர்.
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 ஃபைனல்ஸ் கடந்த வாரம் முடிவடைந்தது. இதன் டெலிகாஸ்ட் ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பானது. 10 ஜோடிகளுடன் தொடங்கிய இந்த பயணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் அமீர் - பாவ்னி, சுஜா - சிவா ஜோடிகளுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் வாய்ப்பு இந்த 2 ஜோடிகளில் ஒருவருக்கு உள்ளது என ஏற்கெனவே இணையத்தில் ரசிகர்கள் சண்டை போட்டு வந்தனர். கடைசியில் 2 ஜோடிகளும் வின்னர்களாக அறிவிக்கப்பட்டனர்.
க்யூட்.. ஸ்வீட்.. ஸ்மார்ட்.. பொறாமை பட வைக்கும் இயக்குனர் அகத்தியனின் மகள்கள்!
5 லட்சம் பரிசு தொகை 2 ஜோடிகளுக்கும் சரிசமமாக பிரித்து தரப்பட்டது. ஃபனல்ஸ் ரவுண்டில் 2 ஜோடிகளும் தங்களது நடன திறமையால் அரங்கத்தை அதிர வைத்தனர். ரம்யா கிருஷ்ணன், 2 ஜோடிகளின் நடனத்தை பார்த்து மெய் சிலிர்ந்து போனார். இப்படி இருக்கையில் 2 ஜோடிகளுக்கும் இணையதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
குழந்தை நட்சத்திரம் டூ சூப்பர் ஹிட் இயக்குனர்! பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணன் யார் தெரியுமா?
இப்படி இருக்கையில் சுஜா - சிவா இருவரும் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் போது தங்களுக்கு நடந்த மிகப் பெரிய சோகத்தை பற்றி கூறியுள்ளனர். நடுவில் சுஜாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகி இருக்கிறது. டாக்டர்களிடம் செக் செய்து பார்த்ததில் அவர் கர்ப்பமாக இருந்து இருக்கிறார். பின்பு மருத்துவரின் தகுந்த ஆலோசனைப்படி தொடர்ந்து நடனம் ஆகி வந்து இருக்கிறார்.
View this post on Instagram
அவருக்கு சிவா முழு பலமாக இருந்து இருக்கிறார். இந்த விஷயம் செட்டில் யாருக்கும் தெரியாதாம். இப்படி இருக்கையில் ஒருநாள் திடீரென்று சுஜாவுக்கு வாந்தி, மயக்கம் அதிகம் ஆகி இருக்கிறது. செக் செய்ததில் அவரின் கரு கலைந்து விட்டது என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் அழுது தீர்த்து இருக்கின்றனர். பின்பு அதில் இருந்து மீண்டும் முழு உழைப்புடன் உழைத்து இருக்கின்றனர். அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இந்த டைட்டில் வின்னர் பட்டம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil, Vijay tv