Biggboss 4 Tamil | பிக்பாஸ் பாலாவின் உண்மை முகம் பற்றிய சுசித்ராவின் போஸ்ட்.. என்ன சொல்லிருக்கார் பாருங்க..

Biggboss 4 Tamil | பிக்பாஸ் பாலாவின் உண்மை முகம் பற்றிய சுசித்ராவின் போஸ்ட்.. என்ன சொல்லிருக்கார் பாருங்க..

சுசித்ரா - பாலா

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பாடகி சுசித்ராவின் சோஷியல் மீடியா போஸ்டுகள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த சுசித்ரா, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாகி விட்டார். அவரது பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விநாயகர் சிலை போட்டோவை முதல் போஸ்டாக பதிவிட்டு எனது பாதுகாவலர் என்று குறிப்பிட்ட சுச்சி, அடுத்ததாக தனது பழைய டிக் டாக் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து பாலா -ஷிவானியின் காதல் குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மீம்ஸ் போஸ்ட் செய்திருந்த சுச்சி, தற்போது பாலாஜி அழும் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த முகத்துக்கு எதையும் பொய்யாக செய்யத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் இன்னும் சுசித்ராவுக்கு பிடித்த போட்டியாளராக பாலா தான் இருக்கிறார் என தெரிகிறது.
இந்த வாரம் பாலா - ஆரி, அர்ச்சனா இடையே வாக்குவாதம் நடைபெற்றிருக்கும் நிலையில் வார இறுதியில் வரும் கமல்ஹாசன் குறும்படம் போட்டு யார் பக்கம் தவறு என்பதை சுட்டிக் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



மணிக்கூண்டு டாஸ்க்கில் சரியாக செயல்படாததற்காக இருவரும் ஜெயிலில் இருந்த போது சுசித்ராவிடம் வாக்குவாதம் செய்துவிட்டு உறங்கிய பாலாஜிக்கு கையில் வைத்திருந்த எமோஜி அட்டையால் காற்று வீசி கண்ணீர் சிந்தினார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அங்கிருக்கும் போட்டியாளர்கள் குறித்து கமலிடம் பேசிய சுசித்ரா, “ரியோ, அர்ச்சனா, நிஷா, சோம், ரமேஷ் ஆகியோர் ஒரு குழுவாகவும் பாலாஜி, சம்யுக்தா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் ஒரு குழுவாகவும் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

மேலும் படிக்க: Bigg Boss 4 Tamil | போட்டியாளர்களை டம்மி பீஸுகள் என்று அழைத்த பரத்.. பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விரும்பும் பரத், பிரேம்ஜி..

மேலும் ஆரி, அனிதா, சனம் ஆகியோர் தனியாக செயல்பட்டதாகவும், ஆரி தான் கூறுவதை பொறுமையாக கேட்பார், நேர்மையானவர் என்று கூறியிருந்தார். அவரின் இந்தக் கணிப்பு சரியாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் தெரிவித்தனர்.
Published by:Sheik Hanifah
First published: