பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சுசித்ரா சிறிய இடைவெளிக்குப் பின் சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு
சுசித்ரா
  • Share this:
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது அனிதா, அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், ரமேஷ், ஆரி, சனம், சம்யுக்தா, சுசித்ரா, பாலாஜி, ஷிவானி, கேப்ரில்லா, ரம்யா மற்றும் ஆஜித் ஆகிய 15 பேர் உள்ளனர்.

2-வது வாரத்தில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். 3-வது வாரத்தில் ஆஜித் தான் வைத்திருந்த எவிக்‌ஷன் பாஸை பயன்படுத்தி தப்பித்தார். 4-வது வாரத்தில் வேல்முருகனும், 5-வது வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும் வெளியேற்றப்பட்டனர்.

6-வது வாரத்தில் தீபாவளி என்பதால் யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று அறிவிக்க, தற்போது 7-வது வாரத்தில் ஆரி, அனிதா, பாலா, ரியோ, சம்யுக்தா, சுசித்ரா, சோம் சேகர் ஆகிய 7 பேரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்று பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார்.


அக்டோபர் 31-ம் தேதி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற சுசித்ரா மூன்று வாரத்தில் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வீட்டை விட்டு வெளியேறும் எபிசோட் இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்குள் சோஷியல் மீடியாவுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கும் சுச்சி, விநாயகர் புகைப்படத்தை முதல் போஸ்டாக பதிவிட்டு எனது பாதுகாவலர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அடுத்ததாக தனது பழைய டிக் டாக் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

 




View this post on Instagram





 

A post shared by Suchitra Ramadurai (@mirchi_suchi)







சுச்சி வெளியேற்றப்பட்டதை அடுத்து விஜய் டிவி சீரியல் நடிகர் முகமது அசீம் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் 4-வது வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய இருக்கிறார்.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading