குக் வித் கோமாளி இறுதிப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்த மாஸ் ஹீரோ!

குக் வித் கோமாளி இறுதிப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்த மாஸ் ஹீரோ!

குக் வித் கோமாளி

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக ஒரு மாஸ் ஹீரோ கலந்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

  • Share this:
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக ஒரு மாஸ் ஹீரோ கலந்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நகைச்சுவை சமையல் என இரண்டையும் மையப்படுத்திய இந்நிகழ்ச்சி, விஜய் டிவி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

’குக் வித் கோமாளி’ முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். முதலில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார்கள். பின்னர் நடந்த வைல்ட் கார்டு ரவுண்டில் ஷகிலாவும், பவித்ரா லட்சுமியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.

இதையடுத்து கடந்த வாரம் குக் வித் கோமாளியில் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி ரவுண்ட் நடந்தது. இனி அடுத்து இறுதிப் போட்டி தான் என தகவல் பரவிய போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விரைவில் முடிக்க வேண்டாம் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில் இதன் இறுதிப் போட்டிக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்துக் கொண்டதன் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அதோடு குக் வித் கோமாளி 2-ம் சீசனில் டைட்டில் வின்னராக கனியும், முதல் ரன்னர் அப்பாக ஷகீலாவும், இரண்டாவது ரன்னர் அப்பாக அஸ்வினும் இடம்பிடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: