Home /News /entertainment /

விஜய் டிவியின் Start Music சீசன்3 Grand Finale: வெற்றி வாகை சூடி லட்சங்களை அள்ளியது யார் தெரியுமா?

விஜய் டிவியின் Start Music சீசன்3 Grand Finale: வெற்றி வாகை சூடி லட்சங்களை அள்ளியது யார் தெரியுமா?

Start Music சீசன்3 Grand Finale

Start Music சீசன்3 Grand Finale

Vijay Television | ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற 8 அணிகளில் ‘குக் வித் கோமாளி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘ராஜா ராணி2’, ‘பாரதி கண்ணம்மா’ ஆகிய நான்கு டீம் மட்டுமே செமி பைனலுக்கு முன்னேறியது. ஸ்டார்ட் மியூசிக் சீசன்3 கிராண்ட் பினாலே: வெற்றி வாகை சூடி லட்சங்களை அள்ளியது யார் தெரியுமா? | Start Music | Entertainment

மேலும் படிக்கவும் ...
விஜய் தொலைக்காட்சி எப்போதுமே காமெடி ப்ளஸ் கலகலப்பான ஷோக்களை ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ளது. என்ன தான் பிற தொலைக்காட்சிகளைப் போலவே அம்மா, அப்பா, அண்ணன் - தம்பி சென்டிமெண்ட் மற்றும் காதலை மையமாக வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பினாலும், ரியாலிட்டி ஷோக்களுக்காகவே மிகவும் புகழ் பெற்ற நம்பர் 1 தமிழ் சேனலாகவும் ஸ்டார் விஜய் டிவி இருக்கிறது.

சூப்பர் சிங்கரில் துவங்கி நீயா நானா, கலக்க போவது யாரு, அது இது எது, கிங்க்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், சூப்பர்ஸ்டார் சிங்கர், ஜோடி ஃபன் அன்லிமிட்டட், பிக்பாஸ், மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பாட்டு, டான்ஸ், காமெடி, சமையல், என விதவிதமான கான்செப்டில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி விஜய் தொலைக்காட்சி அதன் ரசிகர்களை குதூகலம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. அதுவும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

விஜய் டி.வி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றொரு ஷோ ‘ஸ்டார்ட் மியூசிக்’. 2019ம் ஆண்டு பிரியங்கா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் மாகாபா ஆனந்த் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு அக்டோர் மாதம் முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.

மிகவும் விறுவிறுப்பான ஜாலி என்டர்டெயினரான இந்த நிகழ்ச்சியில் ‘குக் வித் கோமாளி’, ‘பாக்கியலட்சுமி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘ராஜாராணி2’, ‘கலக்கப்போவது யாரு’ , ‘பாரதி கண்ணம்மா’, ‘தமிழும் சரஸ்வதியும்’ ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. இந்த ஷோவில் ‘சவுண்ட் பார்ட்டி’, ‘என்ன பாட சொல்லாதே’, ‘பயாஸ்கோப்’, ‘ஒழுங்கா பாடு இல்ல ஸ்பிரே அடிச்சிடுச்வேன்’ ஆகிய ரவுண்டுகள் இடம் பெற்றன. இதில் இரண்டு அணிகள் தலா 3 பேர் விதம் தங்களுக்குள்ளேயே போட்டி போட்டு வந்தனர்.

Read More : உழைப்புக்கு கிடைத்த வெற்றி... பிரபல விஜய்டிவி சீரியல் நடிகருக்கு தெலுங்கில் கிடைத்த வாய்ப்பு!

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற 8 அணிகளில் ‘குக் வித் கோமாளி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘ராஜா ராணி2’, ‘பாரதி கண்ணம்மா’ ஆகிய நான்கு டீம் மட்டுமே செமி பைனலுக்கு முன்னேறியது. அதிலும் ‘பாரதி கண்ணம்மா’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஆகிய இரு அணிகளும் எலிமினேட் ஆன நிலையில், பைனலுக்கு குக் வித் கோமாளி, ‘ராஜா ராணி2’ இரு அணிகளும் தகுதி பெற்றன. இந்த இரண்டு அணிகளிலும் நேற்று பைனல் ஷோவில் பங்கேற்று போட்டா, போட்டி போட்ட நிலையில், வெற்றி வாகை சூடியது யார் என்பது தெரியவந்தது.

Read More : விஜய் டிவி ஜாக்குலினுக்கு தில்ல பாத்தீங்களா? வைரலாகும் படங்கள்!

விறுவிறுப்பாகவும், கோலாகலமாகவும் நடந்த ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 பைனலில் பங்கேற்று ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 வெற்றியாளர் என்ற கவுரவத்துடன் 3 லட்சத்திற்கு 85 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும் ‘ராஜா ராணி சீசன் 2’ அணிக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து சோசியல் மீடியாவில் ராஜா ராணி அணிக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

 
Published by:Elakiya J
First published:

Tags: Entertainment, Television, Vijay tv

அடுத்த செய்தி