Home /News /entertainment /

இதை யாரும் எதிர்பார்க்கல.. முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்!

இதை யாரும் எதிர்பார்க்கல.. முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்!

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தான் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வருவதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

  டிவி ரசிகர்கள் விரும்பும் வகையில் பல ஹிட் சீரியல்களை களமிறக்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது விஜய் டிவி. ஒருபக்கம் காமெடி கலக்கல் ரியாலிட்டி ஷோக்கள், பிரம்மாண்ட பிக்பாஸ் ஷோ என்று டெலிகாஸ்ட் செய்து வந்தாலும் விறுவிறுப்பான சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது ஸ்டார் விஜய் டிவி. அந்த வகையில் மதியம் முதல் இரவு தூங்க செல்லும் வரை பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, காற்றுக்கென்ன வேலி, மெளனராகம், தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பாகி  வருகிறது.

  உன் கல்யாணம் நடந்திடுமா? மகன் கோபிக்கு சவால் விட்ட ஈஸ்வரி அம்மா!  இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசித்து பார்க்கும்படியான ட்ரெண்டை உருவாக்கியதில் விஜய் டிவி-க்கு முக்கிய பங்கு உண்டு.குறிப்பாக மக்களின் ரசனைக்கேற்ப சில மாற்றங்களையும் எல்லா தொடர்களில் கொண்டு வருகின்றன. இது தான் இவர்களின் முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சிறந்த தொடர்களில் ஒன்றான 'பாவம் கணேசன்' தொடர் புதுமையான கதைக்களத்தை கொண்டது.

  ஸ்ரீநிதி என் தாலியை பார்த்து சொன்ன வார்த்தை..சர்ச்சைகளுக்கு முதன்முறையாக பதிலளித்த நட்சத்திரா!

  தன் சந்தோஷத்தை மறந்து குடும்பத்திற்காக மட்டுமே வாழும் இளைஞன் பற்றிய கதை தான் "பாவம் கணேசன்". விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தான் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நவீனுக்கு ஜோடியாக குணவதி என்ற கேரக்டரில் நேகா கவுடா நடித்து வருகிறார். பெரிய குடும்பத்தை கணேசன் தான் தனது உழைப்பு மூலம் காப்பாற்றி வருகிறார். சிறு வயதில் இருந்தே கணேசனும் குணவதியும் ஒருவருக்கு ஒருவர் விரும்பி வருகின்றனர். ஆனால், குடும்ப சூழல் கருதி இருவரும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை. கடைசியில் இவர்களின் திருமணம் முடிந்து இருவரும் பல பிரச்சனைகளுக்கு பிறகு வாழ தொடங்கி விட்டனர்.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  அதே போல் கணேசனின் கடைசி தங்கைக்கு குணாவின் தம்பி பிரவீன் விரும்பம் இல்லாமல் தாலியும் கட்டிவிட்டார். கதை இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்க இந்த மாதத்துடன் பாவம் கணேசன் சீரியல் முடிய இருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி