Home /News /entertainment /

தனுஷ் படத்தில் நடிக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. கடைசி நேரத்தில் கொடுத்த சர்ப்ரைஸ்!

தனுஷ் படத்தில் நடிக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. கடைசி நேரத்தில் கொடுத்த சர்ப்ரைஸ்!

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர்

இதற்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் முடித்து இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சூப்பர் சிங்கர் பிரபலம் ஆஜித் காலிக் தனுஷின் நானே வருவேன் படத்தில் நடிக்கிறார். இந்த தகவலை அவரே இன்ஸ்டா மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோ இதுவரை ஏகப்பட்ட கலைஞர்களை சினிமாவுக்கு தந்துள்ளது. இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் இப்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கின்றனர். செந்தில் ராஜலட்சுமி, மாளவிகா, சந்தோஷ், நித்யஸ்ரீ, பரத், பூஜா, பிரியங்கா என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சிலர் பின்னணி பாடகர்களாக வெள்ளித்திரையில் தடம் பதிக்க இன்னும் சிலர் பாப் ஆல்பம், நடிகர், நடிகைகளாகவும் என்ட்ரி கொடுத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    9 வருட உழைப்பு... ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு வந்த ஹீரோயின் வாய்ப்பு!

    அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3ல் கலந்து கொண்ட ஆஜித்தை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். தனது திறமையால் ஏ.ஆர் ரகுமானிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளார் ஆஜித்.அந்த சீசனின் டைட்டில் வின்னரும் அவர் தான். தனது ரம்மிய குரலால் ரசிகர்கள் மற்றும் நடுவர்களை கட்டி போட்டார் ஆஜித். இசைத்துறையில் மிகப் பெரிய இடத்தை அடைவார் என ரசிகர்கள் நம்பினர். சின்ன இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார்.

    குக் வித் கோமாளி கனியை தேடி போகும் பிரம்மாண்ட வாய்ப்பு?

    ஆனால் அந்த நிகழ்ச்சி ஆஜித்துக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு கேப்ரில்லா என்ற தோழி கிடைத்தார். இவர்கள் இருவரின் நட்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த ஒன்று. சமீபத்தில் தான் ஆஜித் புதியதாக கார் ஒன்றை வாங்கி இருந்தார். இன்ஸ்டாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஆஜித் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு நம்மை ஆச்சரியப்படுத்துவார். அந்த வகையில் தற்போது தனது ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ஆஜித்.



     




    View this post on Instagram





     

    A post shared by Aajeedh Khalique (@aajeedh_khalique)






    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தில் ஆஜித் நடித்து இருக்கிறார். இதற்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் முடித்து இருக்கிறார். அதை புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் வெளியிட்டு வெள்ளித்திரை என்ட்ரியை ஆஜித் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor dhanush, Director selvaragavan, Vijay tv

    அடுத்த செய்தி