• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’நட்புன்னா இது தான்’ 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஃபோட்டோ - நடிகை ஸ்ருதியின் நாஸ்டாலஜிக்!

’நட்புன்னா இது தான்’ 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஃபோட்டோ - நடிகை ஸ்ருதியின் நாஸ்டாலஜிக்!

ஸ்ருதி

ஸ்ருதி

இயக்குநர் மற்றும் நடிகர் திருமுருகன் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் ராகிணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

  • Share this:
சின்னத்திரையில் நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியா, வாணி ராணி, பாரதி கண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பிரபலமான சீரியல்களில் நடித்து, தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவரது அப்டேட் ஃபோட்டோவுக்காக காத்திருக்கும் ஃபாலோயர்ஸ் அதிகம். அவர்களுக்காகவாவது, நாள்தோறும் ஏதாவதொரு இடத்தில் கலக்கலான புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு விடுவார்.

அப்படி, அண்மையில் அவர் பகிர்ந்த புகைப்படம் தான், இப்போதைய டாப்பிகாக மாறியுள்ளது. அதாவது, 14 ஆண்டுகளாக தன்னுடைய பெஸ்டியாக இருக்கும் கீதா ஹரேஷ் மற்றும் நிவேதா என்ற குளோஸ் பிரண்ட்ஸின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பள்ளியில் படிக்கும்போது குளோஸ் பிரண்ட்ஸ் இரண்டு பேருடன் எடுத்த புகைப்படத்தையும், இப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு, கடந்த 14 ஆண்டுகளில் எதுவும் மாறவில்லை, நாங்கள் அப்போது இருந்தது போலவே இப்போதும் ஒன்றாகவே இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். இந்த பந்தம் இதேபோல் எதிர்காலத்திலும் தொடரும் என்று ஸ்ருதி சண்முகப்பிரியா மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ருதியின் இந்த போட்டோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நிவேதா மற்றும் கீதா, எங்களுடைய இந்த பிரண்டஸிப்பில் எதுவும் மாறவில்லை என கூறியுள்ளனர். ஸ்ருதி சண்முகப்பிரியா, பிஸி ஷெட்யூல்களுக்கு மத்தியிலும் டிரிப் செல்வதில் பிரியம் கொண்டவர். அடிக்கடி வெளியூர் மற்றும் நண்பர்களை காண புறப்பட்டுச் செல்லும் அவர், அப்போது அவர்களுடன் எடுக்கும் புகைப்படங்களை தவறாமல் இன்ஸ்டாவில் பதிவிட்டுவிடுவார். கல்யாண பரிசு தொடரிலும் நடித்த அவருக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த நாதஸ்வரம் சீரியலும் நடித்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Sruthi (@sruthi_shanmuga_priya)


இயக்குநர் மற்றும் நடிகர் திருமுருகன் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் ராகிணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலுக்கு முன்பு வரை ரசிகர்கள் மத்தியில் பரிட்சையம் இல்லாமல் இருந்த அவர், நாதஸ்வரம் சீரியலுக்குப் பிறகு பிரபலமானார். அந்த சீரியலில் திருமுருகனின் தங்கை பியூட்டிஷியன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், படித்துக் கொண்டிருக்கும்போதே சின்னத்திரைக்கு நுழைந்த அவர், கல்லூரிக்கு சென்றவந்த பிறகு சீரியல் சூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்வாராம்.

Also read... புத்தி இல்லையா...? - செய்தியாளரை சாடிய சமந்தா!

இவருடைய சொந்த ஊர் கோயம்புத்ததூர். சீரியலில் கிடைத்த புகழைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, விஜய் டீவியில் மெகா ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்தார். பிரண்ஸ்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்ருதி, சூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய பெஸ்டி யார் என அண்மையில் தெரிவித்திருந்தார். வாணி ராணி சீரியலில் நடிக்கும் நவ்யா, தன்னுடைய பெஸ்டி எனக் குறிப்பிட்ட அவர், அனைவருடன் சகஜமாக பேசிப் பழகினாலும் நவ்வயாவிடம் மட்டும் பர்சன்லை பகிர்ந்து கொள்வேன் எனத் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: