முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மகராசி தொடரில் திவ்யா ஸ்ரீதர் திடீர் விலகல்! புதிதாக இணைந்த பிரபல நடிகை

மகராசி தொடரில் திவ்யா ஸ்ரீதர் திடீர் விலகல்! புதிதாக இணைந்த பிரபல நடிகை

மகராசி தொடரில் இருந்து திவ்யா ஸ்ரீதர் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக ஸ்ரீதிகா சனீஷ் இணைந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் நண்பகல் 12 மணிக்கு ஒளிரப்பாகி வரும் மகராசி தொடரில் இருந்து திவ்யா ஸ்ரீதர் விலகியுள்ளார். பாரதி புவியரசனாக நடித்து வந்த அவர், கொரோனா தீவிரம் குறையாத நிலையில் சூட்டிங்கில் பங்கேற்க விரும்பவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவருக்கு பதிலாக புதிய நபரை தேர்வு செய்ய சீரியல் குழு முடிவு செய்தது. பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கும் ஸ்ரீதிகா சனீஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீதிகா சனீஷூம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில், வாட்ச் மீ 12.Pm இன் சன்டிவி மகராசி. திவ்யா ஸ்ரீதர் பாரதி புவியரசனாக நடித்து வந்தநிலையில், அவருடைய கதாப்பாத்திரத்தில் தற்போது ஸ்ரீதிகா சனீஷ் நடிக்க இருக்கிறார்.

Also Read : ’இப்பத்தான் நிம்மதியா இருக்கு.. முதலமைச்சருக்கு என் நன்றி’ - ராகவா லாரன்ஸ் ட்வீட்

2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை முதலில் எஸ்.பி ராஜ்குமார் இயக்கி வந்தார். 80 எபிசோடுகளை இயக்கிய அவர், தொடரில் இருந்து விலகினார். அவருக்கு அடுத்தபடியாக சுந்தரேஸ்வரன் இயக்கி வருகிறார். இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ள இந்த சீரியலில் ஸ்ரீரஞ்சனி, திவ்யா ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஆர். ஆர்யான், விஜய், ராம்ஜி, ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கொரோனா ஊரங்கு காரணமாக மகாராசி தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்புகள் குறைந்து தளர்வுகள் கொடுக்கப்படுவதால், சூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க திவ்யா ஸ்ரீதர் தயக்கம் தெரிவித்ததால், ஸ்ரீதிகா இணைந்துள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே திவ்யா ஸ்ரீதர் விலகல் குறித்து தகவல்கள் வெளியாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக, அந்த நாடகத்தில் புவியரசன் சிதம்பரமாக நடிக்கும் எஸ்.எஸ்.ஆர் ஆர்யானுடன் இணைந்து ஸ்ரீதிகா வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில், கிரீடம் படத்தில் வரும் ‘வேறென்ன வேண்டும் இந்த உலகத்திலே’ என்ற பாடலுக்கு இருவரும் ஒன்றாக பர்ஃபாமன்ஸ் செய்திருந்தனர்.

Also Read : புதிய மாற்றங்கள், திருப்பங்களுடன் விஜய் டிவி சீரியல்கள் - ரசிகர்கள் உற்சாகம்

ஸ்ரீதிகா ஏற்கனவே முத்தாரம் தொடரில் ஷாலினியாகவும், கலசம் தொடரில் மதுமிதாவாகவும் நடித்தார். உரிமை தொடரில் புவனா நட்ராஜன், குலதெய்வம் தொடரில் அலமேலு ஆகிய கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். நாதஸ்வரம் தொடரில் அவர் ஏற்று நடித்த மலர்கொடி கோபாலகிருஷ்ணன், கல்யாண பரிசு 2 தொடரில் நடித்த வித்யா ஆகிய கதாப்பாத்திரங்கள் அவருக்கும் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரையில் முன்னணி நடிகையாகவும் மாறினார். மகராசி தொடரில் மௌனிகா தேவி மல்லிகாவாகவும், ரியாஷ்கான் செந்தூரபாண்டியனாகவும் நடிக்கின்றனர்.

First published:

Tags: Entertainment, Sun TV