பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஹோட்டலுக்கு அழைத்தார்கள்... அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஹோட்டலுக்கு அழைத்தார்கள்... அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!
நடிகை ஸ்ரீரெட்டி
  • News18
  • Last Updated: August 28, 2019, 8:58 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரைத்துறையில் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதற்காக அவர் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார். ஸ்ரீரெட்டியின் போராட்டம் திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதைத்தொடர்ந்து தனது சமூகவலைதள பக்கத்திலும் #METOO புகார்களைத் தெரிவித்து வந்த ஸ்ரீரெட்டி, நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலந்து கொள்ளவில்லை.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து தற்போது சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் வாய்ப்பு பற்றி பேச வேண்டும் என்று கூறி ஹைதராபாத் கோல்கொண்டா ஓட்டலுக்கு வரச் சொன்னார்கள். அங்கு போன பிறகு அபிஷேக் என்பவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.

நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் உங்களுக்கு பிடித்தவருடன் கேமராக்கள் உங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது கட்டிலில் போர்வைக்குள் உறவு வைத்துக் கொள்ளத் தயாரா? என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன்.

அதன் பின்னர் நீங்கள் குட்டையான உடைகள் அணியத் தயாரா என்று கேட்டனர். என்னுடைய உடல் பாகங்களின் அளவையும் அவர்கள் கேட்டனர். இந்தக் கேள்விகள் எனக்கு கோபத்தை ஏற்படுத்தின. அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமா என யோசிக்கிறேன் என்று கூறிவிட்டு ஓட்டலில் இருந்து கிளம்பிவிட்டேன்” இவ்வாறு ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

Loading...

வீடியோ பார்க்க: நீங்க மிரட்டினால் நான் பயந்து போற சாதி கிடையாது... மீரா மிதுன் அதிரடி

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...