• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் டைட்டிலை வென்ற ஸ்ரீதர் சேனா!

சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் டைட்டிலை வென்ற ஸ்ரீதர் சேனா!

சூப்பர் சிங்கர் 8

சூப்பர் சிங்கர் 8

அபிலாஷ், பரத், அனு, முத்து சிற்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய ஆறு பேரும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்

  • Share this:
    ஸ்டார் விஜய் டிவியில் 2006-ல் துவங்கி இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சூப்பர் சிங்கரின் 8-வது சீசன் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.

    இந்த சீசனின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் கல்பனா ராகவேந்தர் ஆகியோர் இருக்கின்றனர். மேலும் இந்த சூப்பர் சிங்கர் 8-வது சீசனை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் கலகலப்பாக தொகுத்து வழங்கினார்கள்.

    இந்த சீசனில் ரேஷ்மா ஷியாம், பாலாஜி ஸ்ரீ, கானா சுதாகர், அபிலாஷ், பரத், அனு ஆனந்த், மானசி, முத்து சிற்பி, அய்யனார், ஆதித்யா, ஸ்ரீதர் சேனா, அரவிந்த் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பல கட்டங்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில் இறுதியாக அனு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் உள்ளிட்டோர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். இதனிடையே இந்த நால்வருடன் இறுதி போட்டியில் மோத போகும் நபரை தேர்வு செய்வதற்கான வைலட் கார்டு ரவுண்ட் அண்மையில் நடைபெற்றது.

    இதில் போட்டியில் இருந்து கடைசி 4 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டவர்களான அய்யனார், ஸ்ரீதர் சேனா, மானஸி, ஆதித்யா பங்கேற்று மீண்டும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இவர்களில் ஸ்ரீதர்சேனா, மானசி இருவரும் தேர்வு செய்யப்பட்டு வைலட் கார்டு ரவுண்ட் மூலம் சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர். இதனை தொடந்து சூப்பர் சிங்கர் Pre-Final நடைபெற்ற நிலையில், அதில் சிறப்பு விருந்தினராக முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி மற்றும் நடிகை மாதூரி ஜெயின் பங்கேற்றனர்.

    இந்தநிலையில் நேற்று சூப்பர் சிங்கர் 8-ன் பைனல் இரண்டு சுற்றுகளாக மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய ஆறு பேரும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த இரண்டு சுற்றிலும் சிறப்பாக பாடியும், மக்களிடம் இருந்து 33 லட்சத்திற்கும் அதிக வாக்குகள் பெற்றும் சூப்பர் சிங்கர் 8-ன் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ஸ்ரீதர் சேனா.

    மேலும் சூப்பர் சிங்கரின் 8-ன் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனாவிற்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பரத் 2-ம் இடத்தையும், அபிலாஷ் 3-ம் இடத்தையும் வென்றுள்ளனர். இந்த பைனல் நிகழ்ச்சியில் அனிருத், சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள், நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் ரித்விகா, பாலா, மணிமேகலை, செஃப் தாமு, புகழ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: