• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • வைல்ட் கார்ட் ரவுண்ட் மூலம் சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் ஃபைனலுக்குள் சென்றது யார்?

வைல்ட் கார்ட் ரவுண்ட் மூலம் சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் ஃபைனலுக்குள் சென்றது யார்?

சூப்பர் சிங்கர் 8

சூப்பர் சிங்கர் 8

இந்த சூப்பர் சிங்கர் 8 வது சீசனை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்

 • Share this:
  சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஸ்டார் விஜய் டிவி மிகவும் பிரபலமாக இருக்க முக்கிய காரணங்களாக இருப்பதற்கு வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள் மற்றொன்று மக்களின் மனங்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோக்கள்.

  பிக்பாஸ், குக் வித கோமாளி உள்ளிட்ட பல புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் ஷோவிற்கு இருக்கும் ரசிகர் வட்டம் மிக பெரியது. எவ்வித பெரிய பின்புலமும் இல்லாமல் வந்து சூப்பர் சிங்கரில் பங்கேற்றதன் மூலம் தங்கள் குரல் வளத்தால் ரசிகர்களை கவர்ந்த பல பாடகர்களை உருவாக்கி தரும் மேடை இது என்பதால் இதற்கு மக்களின் ஆதரவு மிக அதிகம்.

  2006-ல் துவங்கி இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சூப்பர் சிங்கரின் 8-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்த சீசன் இடையே கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக சில வாரங்கள் நிறுத்தப்பட்டு, லாக்டவுன் முடிந்த பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த சீசனின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் இந்த முறை சூப்பர் சிங்கர் 2021 ஆம் ஆண்டிற்கான அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் எஸ்.பி.பி.சரண் ஆகியோர் இருக்கின்றனர்.

  மேலும் இந்த சூப்பர் சிங்கர் 8 வது சீசனை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த சீசனில் ரேஷ்மா ஷியாம், பாலாஜி ஸ்ரீ, கானா சுதாகர், அபிலாஷ், பரத், அனு ஆனந்த், மானசி, முத்து சிற்பி, அய்யனார், ஆதித்யா, ஸ்ரீதர் சேனா, அரவிந்த் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பல கட்டங்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில் இறுதியாக அனு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் உள்ளிட்டோர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.   
  View this post on Instagram

   

  A post shared by Sridhar Sena (@sridharsena)


  இதனிடையே இந்த நால்வருடன் இறுதி போட்டியில் மோத போகும் நபரை தேர்வு செய்வதற்கான வைலட் கார்டு ரவுண்ட் அண்மையில் நடைபெற்றது. இதில் போட்டியில் இருந்து கடைசி 4 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டவர்களான அய்யனார், ஸ்ரீதர் சேனா, மானஸி, ஆதித்யா பங்கேற்று மீண்டும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இவர்களில் ஒருவரை தேர்வு செய்யும் பொறுப்பு மக்களிடம் வழங்கப்பட்டது. மேற்கண்டவர்களில் ஸ்ரீதர் சேனாவிற்கு அதிக ஃபேன்ஸ் உண்டு.   
  View this post on Instagram

   

  A post shared by Maanasi G Kannan (@maanasi.k)


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனால் மக்களின் அமோக ஆதரவுடன் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்று ஸ்ரீதர்சேனா இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இதனிடையே வைலட் கார்டு ரவுண்டில் மற்றொரு போட்டியாளரை செலக்ட் செய்யும் பொறுப்பு நடுவர்களுக்கு சென்றது. அவர்கள் இறுதியாக மானசியை தேர்வு செய்து உள்ளனர். இதனால் வைலட் கார்டு ரவுண்ட் மூலம் ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: