சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் தனது மகளின் முதல் பிறந்த நாளை வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்ரீதேவி சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
கல்யாணப் பரிசு,ராஜா ராணி, வாணி ராணி, தங்கம் உள்ளிட்ட சீரியல்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இவரின் அறிமுகம் தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் ஆனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையே இவருக்கு லக்கியாக அமைந்தது. தொடர்ந்து பல சீரியல்களில் கமிட் ஆகி நடித்தார். குறிப்பாக கல்யாண பரிசு சீரியலில் ஸ்ரீதேவியின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது.
கூடிய விரைவில் அது நடக்க போகுது.. சித்தி 2 கவின் குறித்து வெளியான குட் நியூஸ்!
பின்பு புகைப்பட கலைஞர் அசோக் சின்டாலாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தவர் முதல் லாக்டவுன் சமயத்தில் உடல் ஆரோக்கியம், ஃபிட்னஸ் பக்கம் கவனத்தை திருப்பினார். சில மாதங்கள் கழித்து கர்ப்பமாக இருப்பாதவும் அறிவித்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டார். சில மாதங்கள் கழித்து அவரின் குழந்தை சித்தாராவுக்கு இன்ஸ்டாவில் தனியாக பேட்ஜூம் ஓபன் செய்தார். அதில் குழந்தையின் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் தான் இவரின் குழந்தைக்கு காதணி விழா நடைப்பெற்றது. அதில் சின்னத்திரை பிரபலங்கள், ஸ்ரீதேவியின் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தனது மகளின் முதல் பிறந்த நாளை ஸ்ரீதேவி சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
இதுதவிர மகளின் முதல் பிறந்த நாளை ஸ்பெஷலாக மாற்ற நினைத்த ஸ்ரீதேவி , கேண்டிட் வீடியோ ஒன்றையும் அதே நாளில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீதேவி, அவரின் கணவர், குழந்தை என இவர்களின் ஸ்பெஷல் தருணங்கள் பாடலுடன் சேர்த்து கேண்டிட் வீடியோவாக உள்ளது.திரைப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு வீடியோவின் மேக்கிங் ரசிகர்களை வாவ் சொல்ல வைக்கிறது.
குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு மிகச் சிறந்த சர்ப்ரைஸை, பரிசாக வழங்கியுள்ளீர்கள் என ஸ்ரீதேவியை ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.