சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்று பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் எற்படுத்தியுள்ளது. அந்த பேட்டி பற்றிய முழு விவரம் இங்கே.
கடந்த சில மாதங்களாக சின்னத்திரை சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீநிதி. வலிமை படம் பார்த்து ஸ்ரீநிதி தனது கருத்தை பதிவு செய்ய அது சர்ச்சையானது. அவரின் இன்ஸ்டாவில் கமெண்டுகள் குவிய, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பல விஷயங்களை ஸ்ரீநிதி பகிர்ந்து கொண்டார். தான் மிகப் பெரிய டிப்ரஷனில் இருப்பதாகவும் அவர் பதிவு செய்து இருந்தார். அதுமட்டுமில்லை அவரின் அம்மாவை பற்றி, சின்ன வயசில் இருந்தே சினிமாவில் இருக்கும் பயணத்தை பற்றியும் ஸ்ரீநிதி கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் சிம்புவை காதலிப்பதாக அதிர்ச்சி தகவலை பதிவு செய்தார் ஸ்ரீநிதி.
உண்மையை போட்டுடைத்த வருண்.. சத்யாவுடன் சேர போகும் நேரம்!
சிம்பு வீட்டுக்கு சென்று இரவில் தர்ணா செய்து அந்த புகைப்படத்தை ஷேர் செய்வது
, சிம்புவை பார்க்க வேண்டும் என அடம் பிடித்தது இப்படி ஸ்ரீநிதியின் ஒவ்வொரு விஷயங்களும் நெட்டிசன்களை கோபமடைய செய்தது. பதிலுக்கு அவர்கள் ட்ரோல்,மீம்ஸ்களை வெளியிட தொடங்கினர். அதிலும் குறிப்பாக ஸ்ரீநிதி அவரின் அம்மாவை வைத்து வெளியிடும் ரீலீஸ்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் தான் நட்சத்திரா பற்றி வீடியோ வெளியிட்டு அடுத்த புயலை கிளப்பினார் ஸ்ரீநிதி.
தாங்க முடியாத சந்தோஷம்.. கல்யாணத்தில் கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர் கண்மணி!
நட்சத்திராவுக்கு தவறான நபருடன் திருமணம், அவரை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள். அவளை காப்பாற்றவில்லை என்றால் அவளுக்கும் சித்ரா நிலைமை தான் என கண்ணீருடன் பேசி ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோ வைரலானது. ஆனால் அந்த தகவலை ஸ்ரீநிதியின் அம்மா மறுத்து இருந்தார். நட்சத்திராவும் அதை மறுத்தார். இப்படி சோஷியல் மீடியாவில் தினமும் ஸ்ரீநிதி குறித்த செய்தி தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிரபல
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்ரீநிதி அடுத்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது வாய்ப்பு கேட்டு சென்ற இடத்தில் சேனலின் நிறுவனர் ஸ்ரீநிதியை மடியில் அமர சொன்னாராம். அவருடைய பெயரை, விவரத்தை ஸ்ரீநிதி பதிவு செய்யவில்லை. பின்பு அவருக்கு பயம் வந்து விட்டதாம் கீழே என் ஃபிரண்ட் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் என கூறிவிட்டு அங்கிருந்து வேக வேகமாக கிளம்பி விட்டாராம். பகீர் கிளப்பும் ஸ்ரீநிதியின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.