Home /News /entertainment /

ஸ்ரீநிதி என் தாலியை பார்த்து சொன்ன வார்த்தை..சர்ச்சைகளுக்கு முதன்முறையாக பதிலளித்த நட்சத்திரா!

ஸ்ரீநிதி என் தாலியை பார்த்து சொன்ன வார்த்தை..சர்ச்சைகளுக்கு முதன்முறையாக பதிலளித்த நட்சத்திரா!

ஸ்ரீநிதி- நட்சத்திரா

ஸ்ரீநிதி- நட்சத்திரா

ஸ்ரீநிதி திருமணத்திற்கு பிறகு என்னை வந்து பார்த்தார் என்று நட்சத்திரா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சின்னத்திரை நடிகை நட்சத்திரா முதன்முறையாக ஸ்ரீநிதி வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு நட்சத்திரா தனது கணவருடன் சேர்ந்து அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

    சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை சின்னத்திரை நாயகியாக வலம் வந்த ஸ்ரீநிதி,  சீரியல்  நடிகை நட்சத்திரா திருமணம் பற்றி பல விஷயங்களை பேசி வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டார். சில மணி நேரத்தில் அந்த வீடியோவை அவரே டெலிட் செய்தார். ஆனால் அதற்குள் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி  விட்டது. அந்த விடியோவில் பல அதிர்ச்சியூட்டும் விஷயங்களை ஸ்ரீநிதி பேசி இருந்தார். “ நட்சத்திரா திருமணம் செய்யவுள்ள நபர் நல்லவர் இல்லை, நியாயம் கேட்க போன என்னை அவர்கள் அடிக்க வருகிறார்கள். நட்சத்திராவை அடைத்து வைத்துள்ளார்கள்” என பல விஷயங்களை கூறி பகீர் கிளப்பினார்.

    திருமண நாள்.. கணவருடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்த குக் வித் கோமாளி பிரபலம்!

    ஆனால் இது எதுவுமே உண்மையில்லை என நட்சத்திரா மறுத்து இருந்தார். அதன் பின்பு ஸ்ரீநிதி பெயர் சிம்பு சர்ச்சை, சீரியல் சர்ச்சை என பல விஷயங்களில் மாட்டிக் கொண்டது. நடுவில் சோஷியல் மீடியாவில் இருந்து ஒதுங்கினார். இதற்கிடையில் நட்சத்திராவின் திருமணமும் நடந்து முடிந்தது. அவசர அவசரமாக நட்சத்திராவின் திருமணம் நடந்ததால் அதில் பிரபலங்கள் யாரும் கலந்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு காதல் கணவருடன் சேர்ந்து நட்சத்திரா முதன்முறையாக பேட்டி அளித்துள்ளார். இதில் ஸ்ரீநிதி குறித்தும், திருமணம் பற்றியும் நட்சத்திரா பேசியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sreenidhi Sudarshan (@sreenidhi_)






    4 வருட உழைப்பு.. அளவில்லா சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு!

    ”தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் தான் அவசர அவசரமாக எங்கள் திருமணம் நடந்தது. ஸ்ரீநிதி வீடியோவில் சொன்னது எல்லாமே பொய். ஏதோ மன உளைச்சலில் இருந்தார், என் மீது அவருக்கு நிறைய அன்பு அதனால் தான் டிப்ரஷனில் அப்படி பேசிவிட்டார். திருமணத்திற்கு பிறகு என்னை வந்து பார்த்தார். எதுவுமே நடக்காத மாதிரி என் தாலியை வந்து பார்த்து கேரளா தாலி போட்டு இருக்கீயா? என கேட்டார். இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரீநிதி கூட மட்டுமில்லை சைத்ரா, ஷபானா, ரேஷ்மா எல்லோரும் இப்பவும் என பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் தான்” என்று நட்சத்திரா தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி