முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மறுபடியும் அஜித் படத்தை கமெண்ட் செய்து பேச்சு.. ஸ்ரீநிதிக்கு என்னதான் ஆச்சு?

மறுபடியும் அஜித் படத்தை கமெண்ட் செய்து பேச்சு.. ஸ்ரீநிதிக்கு என்னதான் ஆச்சு?

ஸ்ரீநிதி

ஸ்ரீநிதி

ஸ்ரீநிதி, பிக் பாஸ் வாய்ப்புக்காக தான் இப்படியெல்லாம் செய்கிறார் என ரசிகர்கள் கமெண்ட்

  • Last Updated :

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி மீண்டும் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை ரசிகர்களுக்கு நடிகை ஸ்ரீநிதி மிகவும் பரிச்சயமான முகம். அதை விட சோஷியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு ஸ்ரீநிதியை தெரியாமல் இருக்காது. வலிமை விமர்சனம், சிம்புவை காதலிப்பதாக போஸ்ட், சிம்பு வீட்டு முன்பு தர்ணா, நட்சத்திரா திருமணம் குறித்து பகீர் என இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவுகள் இணையத்தில் வைரலாகி இந்த பொண்ணுக்கு என்னதான்பா ஆச்சு என்று கேட்க வைத்தது. விஜய் டிவியில் 7சி சீரியல் மூலம் அறிமுகமாகி ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியல் மூலம்  பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி.  இவர் கடந்த ஏப்ரல் மாதம் வலிமை திரைப்படத்தைப் பார்த்து தனது கருத்தை கூறினார்.

கல்யாணத்திற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சி.. விஜய்டிவி புகழை தேடி செல்லும் வாய்ப்பு?

வலிமையில் நடிகை ஸ்ரீநிதியுடன் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகை சைத்ராவும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது என்று மீடியாவில் ஸ்ரீநிதியிடம் கேட்க, அதற்கு, அஜீத் சாரை நேரில் கூட பார்த்து விடலாம். ஆனால் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை என்று கூறினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலர் ஸ்ரீநிதியின் கருத்துக்கு எதிர்மறையான கருத்தை பதிவு செய்து வந்தனர். ஒரு சிலரிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக ஸ்ரீநிதி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

குடும்பத்திற்காக நல்லவராக மாறும் கோபி? பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பம்!

அதன் பின்பு தான் சிம்புவை காதலிப்பதாக அவர் வீட்டுக்கு முன்பு தர்ணா செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்டார். அதே போல் சீரியல் நடிகை நட்சத்திரா திருமணம் பற்றியும் பல விஷயங்களை பேசி வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், ஆழ்ந்த மன அழுத்தத்தில் இருக்கும் ஸ்ரீநிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.,
 
View this post on Instagram

 

A post shared by Sreenidhi Sudarshan (@smruthiii8)இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஸ்ரீநிதி மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, வலிமை படத்தை பற்றி மீண்டும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” வலிமை படம் குறித்து நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது, வலிமை படம் ஒரு சுமாரான படம் தான். ஆனால் இந்த சமூகத்திற்கு தேவையான படம்” என்று கூறியுள்ளார். ஸ்ரீநிதி மீண்டும் வலிமை படத்தை விமர்சனம் செய்து இருப்பது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அதே போல் ஸ்ரீநிதி  நெகட்டிவாக பேசி பாப்புலராக நினைக்கிறார், பிக் பாஸ் வாய்ப்புக்காக தான் இப்படியெல்லாம் செய்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Television, TV Serial, Valimai, Vijay tv, Zee tamil