சின்னத்திரை பிரபலங்களில் சமீபத்தில் இவரின் பெயர் சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது. வலிமை படத்தை பார்த்து அதுக் குறித்த கருத்தை பதிவு செய்ததில் இருந்து இவரை பற்றிய செய்திகள், பேட்டிகள் அதிகம் உலா வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் கூட நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை என்று கூறி பகீர் கிளப்பினார் இந்த நடிகை. அவர் வேற யாருமில்லை சின்னத்திரை பிரபல நடிகை ஸ்ரீநிதி தான். சின்னத்திரை ரசிகர்களுக்கு நடிகை ஸ்ரீநிதி மிகவும் பரிச்சயமான முகம்.
இதையும் படிங்க.. முடிய போகும் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல்? இணையத்தில் பரவும் தகவல்!
விஜய் டிவியில் அறிமுகமாகி யாரடி நீ மோகினி சீரியலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சில படங்களில், விளம்பரங்களில் கூட நடித்து இருக்கிறார். அண்மையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் டிப்ரஷனில் இருப்பதாக பதிவு செய்ததை தொடர்ந்து, இவரிடம் பிரபல யூடியூப் சேனல் ஒன்று பேட்டி கண்டது. அப்போது தனது தாயுடன் அந்த பேட்டியில் கலந்துக் கொண்ட ஸ்ரீநிதி பல உண்மைகளை, கஷ்டங்களை வாய்விட்டு சொல்லி அழுது இருந்தார். அந்த வீடியோ பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்திருந்தது.
இதையும் படிங்க.. வீட்டுக்கு வரும் ராதிகா.. மாட்ட போகும் கோபி! என்ன நடக்கிறது பாக்கியலட்சுமி சீரியலில்?
இன்ஸ்டாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும்
ஸ்ரீநிதி அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். கயல் சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி இவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏகப்பட்ட ரீலீஸ்களை வெளியுட்டுள்ளனர். ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் என்ற தொடரில் ஸ்ரீநிதி தர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது ஸ்ரீநிதி அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனிமேல் தர்ஷினி ரோலில் தாட்சாயினி என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் சில நெகடிவ்வான கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர். அதாவது, ஸ்ரீநிதி எந்த சீரியலிலும் இறுதி வரை தொடர்ந்து நடிப்பதில்லை, நிறைய சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பாதியிலே விலகி விடுவார். இதுதான் அவர் அடிக்கடி செய்யும் வேலை என கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் இந்த திடீர் விலகலுக்கு என்ன காரணம்? என்பது இதுவரை தெரியவில்லை. ஸ்ரீநிதியும் இதுக் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.