Home /News /entertainment /

கல்யாண விஷயத்தில் அவளை ஏமாத்திட்டாங்க.. பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி!

கல்யாண விஷயத்தில் அவளை ஏமாத்திட்டாங்க.. பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி!

ஸ்ரீநிதி- நட்சத்திரா

ஸ்ரீநிதி- நட்சத்திரா

'யாரடி நீ மோகினி' ஹீரோயினாக 'வெண்ணிலா' என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் நட்சத்திரா.

  சின்னத்திரை சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீநிதி, சீரியல் நடிகையும் அவரின் நெருங்கிய தோழியுமான நட்சத்திராவுக்காக கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பல அதிர்ச்சி தகவலையும் ஸ்ரீநிதி பகிர்ந்துள்ளார்.

  அந்த பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பின்பு அதிக கவனம் பெறும் சின்னத்திரை நடிகையாக மாறி இருக்கிறார் ஸ்ரீநிதி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர், சீரியல்கள், ஒரு சில படங்களில் கூட நடித்து இருக்கிறார். இறுதியாக ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ’நினைத்தாலே இனிக்கும்’ தொடரில் நடித்து வந்தார். கடந்த வாரம் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகினார். இவர் ஒரு தீவிரமான சிம்பு ரசிகை. சில தினங்களுக்கு முன்பு சிம்புவை காதலிப்பதாக, அவருடன் சேர்த்து வையுங்கள் என்று இன்ஸ்டாவில் புயலை கிளப்பி விட்டு சிம்பு வீட்டுக்கு முன்பு நின்று தர்ணா செய்தார். இந்த விஷயம் சின்னத்திரை, வெள்ளித்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருந்தது.

  இதையும் படிங்க.. 2 மணி நேரத்தில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி!

  இது ஒருபுறம் இருக்க, ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாவில் அழுதப்படியே வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் சீரியல் நடிகை நட்சத்திரா பற்றி பேசி இருக்கிறார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த சீரியல் 'யாரடி நீ மோகினி'. இதில் ஹீரோயினாக 'வெண்ணிலா' என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் நட்சத்திரா. பிரைம் டைமில் ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. நட்சத்திராவுக்கும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. தற்போது நட்சத்திரா கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

  நட்சத்திரா, செம்பருத்தி ஷபானா, ஸ்ரீநிதி, ரேஷ்மா, சைத்ரா ரெட்டி ஆகியோர் குளோஸ் ஃபிரண்டஸ் என சோஷியல் மீடியா அறிந்த விஷயம். இவர்கள் அனைவரும் கொரோனா டைமில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் ஹிட் அடித்தது. அதன் பின்பு ரேஷ்மா, ஷபானா, சைத்ரா மூவரும் திருமணம் ஆகி பிஸியாகி விட்டனர். இந்நிலையில் நட்சத்திராவுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்ததாம். ஆனால் அவரின் வருங்கால கணவர் நல்லவர் இல்லை என கூறி ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Nidhi (@sreenidhi_)


  அந்த வீடியோவில் ஸ்ரீநிதி பேசியிருப்பதாவது “ நட்சத்திரா ரொம்ப நல்ல பொண்ணு. அவ என்னுடன் 1 வருடம் கொரோனா டைமில் தங்கி இருந்தாள். அப்பா கிடையாது அம்மா மட்டும் தான். கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்து இருக்கிறாள். ஆனால் இப்போது கல்யாணம் என்ற விஷயத்தில் ஏமாந்து விட்டாள். அவளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. சொந்த தங்கையை கூட அழைக்கவில்லை. அவரின் வருங்கால கணவர் நல்லவர் இல்லை. அவரின் மொத்த குடும்பமும் நட்சத்திராவை ஏமாற்றுகிறார்கள். உண்மையை கேட்க போனால் என்னையும் அடிக்க வருகிறார்கள்.

  இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

  அவ லைஃப் நல்லா இருக்க வேண்டும். விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமை நட்சத்திராவுக்கு வர கூடாது “ என்று அழுதுக் கொண்டே இந்த வீடியோவில் பேசி இருக்கிறார் ஸ்ரீநிதி. ஆனால் இவ்வளவும் பேசிவிட்டு அந்த வீடியோவை  தற்போது நீக்கியும் விட்டார். ஸ்ரீநிதியின் குற்றச்சாட்டுக்கு இப்போது வரை நட்சத்திரா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial, Zee tamil

  அடுத்த செய்தி