Home /News /entertainment /

காதலரை கரம் பிடித்த நட்சத்திரா... நெருங்கிய தோழியான ஸ்ரீநிதி கொடுத்த ரியாக்‌ஷன்!

காதலரை கரம் பிடித்த நட்சத்திரா... நெருங்கிய தோழியான ஸ்ரீநிதி கொடுத்த ரியாக்‌ஷன்!

ஸ்ரீநிதி - நட்சத்திரா

ஸ்ரீநிதி - நட்சத்திரா

வீடியோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து “சந்திப்போமா” எனவும் கேப்ஷன் கொடுத்துள்ளார். ஸ்ரீநிதி.

    சின்னத்திரை நடிகை நட்சத்திரா அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ஸ்ரீநிதி நட்சத்திராவுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

    சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீநிதி யாரடி நீ மோகினி சீரியல் மூலம் புகழடைந்தார். குழந்தை நட்சத்திரமான  இவர், சமீப காலமாக இணையத்தில் அடிக்கடி சர்ச்சையான வீடியோக்களை பதிவிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். சிம்புவை காதலிக்கிறேன் என்பதில் தொடங்கி அவரின் வீட்டுக்கு முன்பு தர்ணா, நடிகை நட்சத்திராவின் நிச்சயதார்த்தம் பற்றி வீடியோ என ஸ்ரீநிதியின் பதிவுகள் இணையத்தில் பேசும் பொருளானது. அதன் பின்பு ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் இருப்பது தான் இதற்கெல்லாம் காரணம் எனவும் அவர் மருத்துவரை ஆலோசிக்க செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    அவருக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு.. சர்ச்சைக்கு பதில் சொன்ன பிக் பாஸ் இசைவாணி!

    சில நாட்கள் அமைதியாக இருந்தவர் இப்போது நட்சத்திராவின் திருமணத்திற்கு பின்பு மீண்டும் அவருடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதற்கு முன்பு, நட்சத்திராவின் கணவர் நல்லவர் இல்லை என கூறி ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டார். சின்னத்திரையில் இந்த விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு பின்பு நட்சத்திரா இதற்கு விளக்கம் கொடுத்து மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஸ்ரீநிதி கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை இல்லை என்றார்.

    சூப்பர் சிங்கர் பிரபலத்தை தேடி போகும் பிக் பாஸ் வாய்ப்பு? இணையத்தில் பரவும் தகவல்!

    இப்படி இருக்கையில் 2 தினங்களுக்கு முன்பு நட்சத்திராவின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது. அதற்கு காரணம், நட்சத்திராவின் தாத்தா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளார். அவரின் ஆசைக்காக தான் திருமணம் சீக்கிரமாக முடிக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகி இருந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Nidhi (@sreenidhi_)






    இந்நிலையில் ஸ்ரீநிதி நட்சத்திராவின் திருமணத்திற்கு வாழ்த்து கூறி போஸ்ட் ஒன்றை ஷேர் செய்தார். சில மணி நேரம் கழித்து அதை தூக்கி விட்டார். இப்போது, நட்சத்திராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை , வீடியோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து “சந்திப்போமா” எனவும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் ஸ்ரீநிதியை கலாய்த்தும், சிலர் ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Television, TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி