• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரோபோ சங்கர் Vs நாஞ்சில் சம்பத் - முதல்வன் பட பாணியில் களைகட்டும் கன்னித் தீவு!

ரோபோ சங்கர் Vs நாஞ்சில் சம்பத் - முதல்வன் பட பாணியில் களைகட்டும் கன்னித் தீவு!

ரோபோ சங்கர் Vs நாஞ்சில் சம்பத்

ரோபோ சங்கர் Vs நாஞ்சில் சம்பத்

இந்த ஷோவில் பங்கேற்றது குறித்து தகவல்களையும், அனுபவங்களையும் நாஞ்சில் சம்பத் பகிர்ந்து உள்ளார்.

  • Share this:
ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் மூலம் ரசிகர்களின் பொழுதை கலர்ஃபுல்லாக மாற்றி வரும் பிரபல முன்னணி சேனலான கலர்ஸ் தமிழுக்கு ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே செல்கிறது. ரசிகர்களை உற்சாகப்படுத்த பல புதுமையான மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது கலர்ஸ் தமிழ். அந்த வகையில் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நையாண்டி ஷோவாக "கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0" கலர்ஸ் தமிழ் சேனலில் ஓடி கொண்டிருக்கிறது. சின்னத்திரை வரலாற்றில் வித்தியாசமான ஷோவாக ஒளிபரப்பாகும் இதற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

ஞாயிற்றுகிழமை தோறும் இரவு 7.30-க்கு ஒளிபரப்பாகி வரும் கண்கவர் விளையாட்டு, பொழுதுபோக்கு, நகைச்சுவை அம்சங்கள் நிறைந்த இந்த "கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0"-வில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வருகின்றன. இதனிடையே கன்னித் தீவு ஷோவில் இந்த வார சிறப்பு விருந்தினராக அரசியலில் இருந்து நடிப்பு துறைக்கு வந்துள்ள பிரபல பேச்சாளரும், அரசியல்வாதியும், நடிகருமான நாஞ்சில் சம்பத் பங்கேற்ற எபிசோட் வரும் ஞாயிறு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த ஷோவில் பங்கேற்றது குறித்து தகவல்களையும், அனுபவங்களையும் நாஞ்சில் சம்பத் பகிர்ந்து உள்ளார். நகைச்சுவை அரங்கில் ஒரு தனித்துவ கான்சப்ட்டுடன் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியில் நான் பங்கேற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த குறையை இந்த ஷோ போக்கியுள்ளது. கன்னி தீவு உல்லாச உலகம் 2.0 இன் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் அதிலிருக்கும் நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு அற்புதமான அனுபவம். இந்த ஷோவில் எனது நகைச்சுவை பக்கத்தை வெளிக்காட்ட வைத்ததை நான் மிகவும் ரசித்தேன். ஆடியன்ஸும் நான் பங்கேற்ற எபிசோடை பார்த்து ரசித்து மகிழ்வார்கள் என்று நம்புவதாக நாஞ்சில் சம்பத் கூறி இருக்கிறார்.

Also read... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் நடிகர் - சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் விலகல்!

இந்த நகைச்சுவை ஸ்பூஃப் ஷோவில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத்திடம், முதல்வன் பட அர்ஜுன் பாணியில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் கேள்விகளை கேட்டு மடக்குவது போன்ற ப்ரமோ வீடியோவை கலர்ஸ் தமிழ் தனது சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து இருக்கிறது. இதை பார்த்தால் நாஞ்சில் சம்பத் பங்கேற்றுள்ள எபிசோட் காமெடியாகவும் அதே சமயம் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரமோ வீடியோவில் ரோபோ சங்கர் நாஞ்சில் சம்பத்திடம், நான் பதறக்கூடிய கேள்விகளை கேப்பேன். நீங்கள் பதறாமல் பதில் சொல்லணும் என்று கூறி, நீங்க திடீர்னு ஹீரோவாகி விட்டால் எந்த ஹீரோயின் வேணும்னு அடம் பிடிப்பிங்க, நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா அல்லது வேண்டாமா என்று பல கேள்விகளை கேட்கிறார். இதில் அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நாஞ்சில் சம்பத் கூற, நீங்க நடிகர் ஆயிட்டங்களே என்று எதிர் கேள்வி கேட்டு மடக்க பின்னணியில் முதல்வன் திரைப்பட மியூசிக் ஒலிக்கிறது. இந்த ப்ரமோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: