முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எஸ்.பி.பி மகன் எஸ்.பி சரணுக்கு இப்படியொரு நிலையா! சூப்பர் சிங்கரில் நடுவராக இருக்க இதுதான் காரணமா?

எஸ்.பி.பி மகன் எஸ்.பி சரணுக்கு இப்படியொரு நிலையா! சூப்பர் சிங்கரில் நடுவராக இருக்க இதுதான் காரணமா?

எஸ்.பி சரண்

எஸ்.பி சரண்

”நான் பாட மாட்டேன் என்று எந்த இடத்திலும் கூறியது இல்லை.”

  • Last Updated :

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் எஸ்.பி சரண் தனக்கு இப்போது திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் வருவதில்லை என ஆதங்கத்துடன் கூறியுள்ளார். சமீபத்தில் எஸ்.பி சரண் கொடுத்த இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

எண்ணற்ற பாடல்களால் மறைந்தும் ரசிகர்கள் மனதில்  இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடும் வானம்பாடி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் எஸ்.பி சரண் பற்றி அனைவருக்கும் தெரியும். இவர் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ஆரம்பத்தில் சிங்கராக அறிமுகம் ஆனவர் பின்பு ஒரு சில படங்களில் நடித்தார். சில படங்களை தயாரித்தார். இப்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். இதுத்தவிர விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இடம் பெறுகிறார். அப்பாவை போலவே இசை, பாடலில் கவனம் செலுத்தி வந்த எஸ்.பி சரணை சின்னத்திரையில் மட்டுமே இப்போது அதிகம் பார்க்க முடிகிறது.

பிரபல சீரியல் நடிகருக்கு காதல் தோல்வி? ஆறுதல் சொன்ன ரசிகர்கள்!

இந்நிலையில் தனக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு வருவதில்லை என எஸ்.பி சரண் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். எஸ்.பி சரணின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பல விஷயங்களை சரண் ஷேர் செய்துள்ளார்.

ஹேமாவுக்கு தெரிய வந்த மிகப் பெரிய உண்மை... கண்ணம்மா சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதில் சரண் பேசியிருப்பதாவது, “ எப்போதுமே மெலோடி பாடல்களை மக்கள் நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். ஸ்பீட் பீட் பாடல்கள்  ரிலீஸ் ஆகும் போது பீக்கில் இருக்கும் , அதனை ரசிகர்கள் ரசித்து விட்டு பின்பு மறந்து விடுகிறார்கள்.  நான் அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி இருக்கிறேன். ஒரு சமயத்தில் என்னை தேடி பல வாய்ப்புகள் வந்தன. அதில் நான் பாடிய பாடல்களும், படங்களும் ஹிட் ஆகின. அதற்கு ரசிகர்களிடமும் நல்ல ஆதரவு இருந்தது.


ஆனால்,  இப்போது எனக்கு வாய்ப்புகள் வருவதில்லை. நான் பாட மாட்டேன் என்று எந்த இடத்திலும் கூறியது இல்லை. ஆனாலும்  எனக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். சரணின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாக பலரும் அவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Spb, Television, Vijay tv